திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ஜீன்ஸ் படத்தில் பெயர் வாங்கிய ராதிகாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காத சங்கர்.. காரணம் இதுதான்!

1998ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ஒவ்வொரு பாடல் காட்சிகளும் வித்தியாசமாக படமாக்கப்பட்டது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதிலும் குறிப்பாக பூவுக்குள் ஒளிந்திருக்கும் என்ற பாடலில் உலகில் உள்ள ஏழு அதிசயங்களையும் காட்டி ரசிகர்களை பிரமிக்க வைத்திருப்பார். பிரசாந்த் கதாபாத்திரத்தை தாண்டி ஐஸ்வர்யா ராய், லட்சுமி, ராதிகா, நாசர் என அனைவருக்குமே இந்த படத்தில் வலுவான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக ராதிகா நடித்த சுந்தராம்பாள் கதாபாத்திரம் அரக்கத்தனத்துடன் கூடிய மனசாட்சியே இல்லாத பெண் போன்று வடிவமைக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்துவிட்டு ராதிகாவை திட்டாத ரசிகர்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு ராதிகாவின் கதாபாத்திரம் வலுவாக அமைந்து இந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றியது. அதன்பிறகு சங்கர் பல படங்கள் எடுத்து விட்டாலும் தற்போது வரை ராதிகாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார்.

கண்டிப்பாக இது பற்றி ராதிகா கேட்காமல் இருப்பாரா. ஒருமுறை சங்கரிடம், உங்களுடைய படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து நல்ல பெயர் வாங்கி கொடுத்தபோதும் மீண்டும் உங்களுடைய படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருக்க காரணம் என்ன? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு சங்கர், சுந்தராம்பா கதாபாத்திரத்தை தாண்டி வலுவான கதாபாத்திரம் என்னால் எழுத முடியவில்லை எனவும் அப்படி ஒரு கதாபாத்திரம் அமையும் போதுதான் கண்டிப்பாக உங்களைக் கூப்பிட்டு நடிக்க வைக்க வேண்டும் என உறுதியாக இருப்பதாகவும் கூறிவிட்டாராம். வாய்ப்பு தர முடியாது என நேரடியாகவே சொல்லிருக்கலாம் என கிண்டல் செய்துகொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாராம் ராதிகா.

radhika-sundharamba-cinemapettai
radhika-sundharamba-cinemapettai
- Advertisement -

Trending News