பிஞ்சிலேயே பழுத்த ரவீணா தாஹா.. நடிகருடன் நெருக்கமான நடிப்பால் டென்ஷனான நெட்டிசன்கள்

விஜய் நடித்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீணா தாஹா ராட்சசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு தான் ரவீணா ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம் அடைந்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அப்படி ஒரு சர்ச்சை கலந்த கொஞ்சம் மோசமான காட்சியில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌன ராகம் 2 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக சீரியலாக இருக்கிறது.

சமீபத்தில்தான் 18 வயதை பூர்த்தி செய்த ரவீணா தாஹா, இந்த சீரியலில் தன்னுடன் நடித்து வரும் இளம் நடிகர் ஒருவருடன் சேர்ந்து நெருக்கமான வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். என்னதான் ரீல்ஸ் வீடியோவாக இருந்தாலும் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை என்பதை அவர்கள் தெரிவிக்கும் கமெண்ட்களில் இருந்தே தெரிகிறது.

இந்த வயசிலேயே பெரிய ஹீரோயின் நெனப்பு வந்து விட்டது எனவும், இதெல்லாம் பார்த்துதான் பெண்பிள்ளைகள் சீக்கிரம் கெட்டுப் போகிறார்கள் எனவும் பெற்றோர்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர் என்கிறார்கள். அப்படி என்ன நெருக்கம் காட்டிட்டாங்க என சிலர் கேட்பதையும் பார்க்க முடிகிறது.

மௌனராகம் சீரியலில் ரவீணாவுக்கு திருமணம் நடப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது போதே இது சிறு வயது திருமணத்தை ஊக்குவிப்பது போல் இருக்கிறது என ஒருபக்கம் பஞ்சாயத்து எழும்பி உள்ளது.

raveena
raveena

அந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்னரே அந்த சீரியலில் நடித்துவரும் நடிகருடன் அடிக்கடி கட்டி அணைத்துக் நெருக்கமான ரீல்ஸ் வீடியோக்கள் செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெகுவிரைவில் இவரை மீம்ஸ் மெட்டீரியல் மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது சீரியல் வட்டாரம்.

raveena-reels
raveena-reels