Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் இந்த நாடகம் அண்ணாத்த வசூலுக்கு தான்.. தைரியமாக பேட்டி கொடுத்த பிரபல பத்திரிகையாளர்
கிட்டத்தட்ட 25 வருட அரசியல் வதந்திகளுக்கு ஒரு வழியாக சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியது ஞாபகம் இருக்கலாம்.
அதனைத் தொடர்ந்து அடுத்த முதல்வர் ரஜினிதான் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சந்து பொந்து இண்டு இடுக்கு என எல்லா பக்கமும் ரஜினியின் அரசியல் வருகையை பரப்ப அடுத்த சில மாதங்களிலேயே உடல்நிலை சரி இல்லாமல் போனதை எண்ணி அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என்று தெரிவித்துவிட்டார்.
அதை அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை வந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை நேரடியாக சொல்லாமல் அதற்கு முன்னால் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி சில மணி நேரங்களில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நாடகம் எல்லாமே அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தின் வசூலுக்கு தான் என்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி. வலைப்பேச்சு பிரபலமான இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும் போது ரஜினியின் அரசியல் குறித்த இந்த பரபரப்பு எதற்காக? எனக் கேட்டார் தொகுப்பாளர்.
அதற்கு ஏற்கனவே தர்பார் படம் சரியாக போகாததால் வசூல் ரீதியாக ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் ரஜினி இந்த மாதிரி சித்து வேலைகளை காட்டி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அண்ணாத்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியைப் பொறுத்தே ரஜினியின் சினிமா வருங்காலம் அமையும் என்பதால் ஏகப்பட்ட டென்ஷனில் இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார்.

rajinikanth-cinemapettai
