ரஜினியின் உயிர் நண்பன் கராத்தே மணி ஞாபகம் இருக்கா.? அவரின் தற்போதைய நிலைமை

சினிமாவை பொறுத்தவரை இவரை தெரியும் அவரை தெரியும் என்று பலரை தெரிந்து இருந்தாலும், திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை மக்களிடம் அபிமானம் பெறும் வரை எவரும் வெல்லமுடியாது. ஒருவர் பெரிய இயக்குனர்களின் மகனாக இருந்தாலும் சரி, பெரிய நடிகரின் நெருக்கமான நண்பராக இருந்தாலும் சரி சினிமாவில் வெல்ல வேண்டும் என்றால் போராடித்தான் ஆக வேண்டும்.

அப்படி சினிமாவில் பல பிரபலங்களின் நெருக்கமான உறவுகள் நண்பர்கள் என பலரும் வந்து போய் இருக்கின்றனர். ஆனால் இளையராஜா பாரதிராஜா போல, ரஜினி கமல் போல வெகு சிலர் மட்டுமே சாதித்து காட்டி இருக்கின்றனர். அந்த வரிசையில் இன்று சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் சினிமாவில் சண்டை பயிற்சி அமைப்பாளாரகவும் இருந்த கராத்தே மணி இன்று இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டார்.

80 களின் தொடக்கத்தில் வெளியான அன்புக்கு நான் அடிமை, ரங்கா, விடியும் வரை காத்திரு போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்திலும், மிரட்டும் வில்லனாகவும் ரஜினியின் நண்பராகவும் நடித்து இருந்தார். மிகச்சிறந்த நடிகர் என்ற பெயர் வாங்கவில்லை என்றாலும் தன்னுடைய கை தேர்ந்த கராத்தே கலையை திரையில் காட்டி அசர வைத்தவர்.

இவர் நடிக்கும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக இருக்கும் என்று அன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக பாராட்டப்படும். இப்படி புகழ் பெற்ற கராத்தே மணி அதன் பின் படங்களில் தலை காட்டவில்லை. சினிமாவில் இருந்து தன்னை விலக்கி கொண்டார். அதற்கு இவர் கூறிய காரணம் “நான் கராத்தே வாத்தியார் என்னிடம் பல மாணவர்கள் கராத்தே பயின்று வருகின்றனர்.

அப்படி இருக்கையில் நான் திரையில் ஹீரோக்களிடம் அடி வாங்குவதை அவர்கள் பார்த்தால் என் மீது இருக்கும் மரியாதை போய் விடும். அதனால் தான் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டேன்” என்று கூறுகிறார். திரைத்துறையை வேண்டாம் என அவர் முடிவெடுக்க காரணமாக இருந்த கராத்தேயில் அவர் செய்யாத சாதனைகளே இல்லை. அதில் நேர்மையாக உண்மையாக தனது ஈடுபாட்டை செலுத்தி இருக்கிறார் காரத்தே மணி.

தனது கராத்தே மீது அவர் கொண்ட காதல் இதன் மூலம் தெரியவருகிறது. ஒரே நேரத்தில் 10 பேரை சமாளிக்கும் இவரை ஒரு தொக்கு ஹீரோ அடிப்பதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள். இருந்தாலும் இவரின் திரைப்பயணம் தொடர்ந்து இருக்கலாம் என்று தான் சினிமா வாட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்