நாம் தான் மேதாவி என தலைவிரித்து ஆடும் 5 இயக்குனர்கள்.. ரஜினியால் ஆட்டிட்யூட் சரியில்லை என நிராகரிக்கப்பட்ட இயக்குனர்

Super Star Rajinikanth: திரையரங்குகளுக்கு திரைப்படங்கள் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பவர்கள் தான் இயக்குநர்கள். இவர்களின் பங்கு திரைப்படங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கதைக்கு ஏற்ப வழி நடத்துவது, இவர்களின் முக்கிய பொறுப்பாகும். அப்படிப்பட்ட இயக்குனர்களில் 5 பேர், நான்தான் மிகவும் மேதாவி என நினைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.

பாலா: பாலா என அழைக்கப்படும் பாலசுப்ரமணியம் இதில் ஒருவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பாடலாசிரியராக இருந்தார். இயக்குனர் பாலு மகேந்திரா இடம் துணை இயக்குனராக பயணத்தை தொடங்கினார். பிறகு “சேது” என்னும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இவரின் கதைக்களம் மற்றவர்களை காட்டிலும் தனித்துவமாக இருக்கும். இவர் தயாரிப்பாளராகவும் சில திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இவரின் படைப்பான “பரதேசி” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. பல விருதுகளையும் அள்ளி குவித்தது.

Also Read: எலி வலையில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கும் ரஜினி.. சந்திராயன்-3 போல உயர்ந்த கேரியருக்கு வந்த பேராபத்து

ஹரி: இவர்களில் ஹரியும் இடம்பெறுவார். இவரும் ஆரம்ப காலகட்டத்தில் துணை இயக்குனராக பல இயக்குனர்களிடம் வேலை செய்தார். பிறகு “தமிழ் ” என்னும் திரைப்படத்தில் இவர் இயக்குனராக அறிமுகமானர். இவர் சிறந்த பாடலாசிரியர் கூட, இவரின் திரைப்படங்கள் பொதுவாக கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களை மையமாக கொண்டு இருக்கும். இவரும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் எனும் கண்ணோட்டத்தில் இருப்பவர் தான்.

மிஷ்கின்: சண்முகராஜா என்னும் மிஸ்கின் இவர்களுள் ஒருவர் தான். இவர் திரைப்படங்கள் இயக்குவதற்கு முன்பே சினிமாவில் யூத் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் “சித்திரம் பேசுதடி”. இவர் லியோ படத்திலும் நடித்துள்ளார்.இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், இசையமைப்பாளராகவும் ரசிகர்களால் நன்கு அறியப்படுவார். மேடைகளில் பல நடிகர்களை பற்றி ரொம்பவும் அவதூறாக இவர் பேசியது உண்டு.

Also Read: தாத்தா சாயலில் இருக்கும் தனுஷ் மகன் யாத்ரா.. அப்பா, அம்மாவை மிஞ்சிய உயரம், வைரலாகும் ஃபோட்டோ

சிபி சக்கரவர்த்தி: டான் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி. அவரும் இதே போன்று தான் தனக்குத்தான் எல்லாம் தெரியும் எனும் கண்ணோட்டத்தில் இருப்பவர். இவரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை ஒன்று சேர்த்து டான் திரைப்படத்தில் காட்சியாக எடுத்துள்ளார். இவரைத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரின் ஆட்டிட்யூட் சரியில்லை என்று நிராகரித்துவிட்டார்.

பா ரஞ்சித்: இந்த லிஸ்டில் பா ரஞ்சித்தும் ஒருவர். இவர் அட்டகத்தி எனும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களிலும் இயக்கியுள்ளார். இவர் சில படங்களில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரின் படைப்பில் வெளியான அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்கள் இவருக்கு பல விருதுகளை குவித்துள்ளது. இவரின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் சிறிது தனித்துவமாக இருக்கும். இவருடைய மேடைப்பேச்சுகள் சில சற்று முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது.

Also Read: லைக்கா, உதயநிதிக்கு கமல் வைக்கும் செக்.. வேற லெவலில் உலக நாயகன் செய்யும் ராஜதந்திரம்

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்