ரஜினியின் சிஷ்யனாய் இருந்தும், கமலை அசிங்கப்படுத்திய லாரன்ஸ்.. மொத்த சங்கதியும் வெளியான அம்பலம்

Actor Lawrance: கமலின் நடிப்பை பார்த்து அவரை ரோல் மாடலாக நினைத்து சினிமாவிற்குள் நுழைந்தவர்கள் ஏராளமானவர்கள். அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகர் மற்றும் சிஷ்யனாக வந்தவர் ஹீரோவாக முளைத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இவருடைய வெற்றிக்கு முக்கால்வாசி காரணம் ரஜினி தான் என்று குருவை பற்றி பேசாத நாட்களே கிடையாது. அந்த அளவிற்கு ரஜினியின் வெறித்தனமான ரசிகர். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

அப்படிப்பட்ட இவர் கமலை அசிங்கப்படுத்தும் விதமாக ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அதாவது லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சந்தானம் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ஆனால் முதலில் இவருக்கு பதிலாக லோகேஷ், லாரன்ஸை நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டார் அது நடக்கவில்லை.

Also read: ஜெட் வேகத்தில் எகிறிய ரஜினியின் சம்பளம்.. விஜய்க்கு பதிலடி கொடுக்க தலைவர் 171 படத்திற்கு வாரி இறைக்கும் சன் பிக்சர்ஸ்

அதற்கு காரணம் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது என லாரன்ஸ் மறுத்திருக்கிறார். இதற்கு இவர் கூறிய காரணம் விக்ரம் படத்தில் அதிகம் வன்மத்தை ஏற்படுத்தும் விதமாக ரத்தம் சதையுமாய் சண்டைகள் இருப்பதால் எனக்கு ஒத்து வராது என்ற காரணங்களை சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த காரணம் உண்மையானது இல்லை.

ஏனென்றால் இவர் நடித்த காஞ்சனா படத்தில் எப்பேர்பட்ட வன்முறை காட்சிகள் இருக்கும். அதிலும் ஹீரோயின்களை எப்படி எல்லாம் ஆடவிட்டு பயன்படுத்திருப்பார் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது விக்ரம் படத்தை மட்டும் இந்த காரணங்களை சொல்லி இருப்பது எந்த விதத்தில் உண்மையாக இருக்க முடியும்.

Also read: தன் கையை வைத்தே கண்ணை குத்தப் போகும் ரஜினி.. ஐஸ்வர்யாவால் விழி பிதுங்கி நிற்கும் சூப்பர் ஸ்டார்

மேலும் லோகேஷ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் தற்போது லாரன்ஸ் நடிப்பதற்கு கமிட்டாய் இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக இந்தப் படத்திலும் ரத்தம் சதையுமாக வன்முறை காட்சிகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த ஒரு விஷயத்தில் இருந்தே தெரிகிறது கமல் படத்தில் நடிக்க இஷ்டம் இல்லை என்பதால் தான் படத்தில் நிறைய குறைகளை சொல்லி மறுத்திருக்கிறார்.

இப்படி சொன்னதெல்லாம் மறந்துவிட்டு லோகேஷ் தயாரிப்பிலேயே நடித்துக் கொண்டு வருகிறார். இதிலிருந்தே இவர் எந்த அளவிற்கு கமலை அசிங்கப்படுத்தி இருக்கிறார் என்பது புரிகிறது. என்னதான் ரஜினியின் சிஷ்யனாக இருந்தாலும் இந்த அளவிற்கு அவருடைய படத்தை உதாசீனப்படுத்தி இருக்க வேண்டியதில்லை. அதற்கு சொன்ன காரணமும் பொருத்தமாக இல்லை.

Also read: ஒரே படத்தில் ஒரேடியாக உயர்ந்த லோகேஷ், நெல்சனின் சம்பளம்.. இதுக்கு தான் பெரிய இடத்து சகவாசம் வைக்கணும் போல

- Advertisement -