படையப்பா படத்தால் தோல்வியை சந்தித்த விஜய் படம்.. மன வருத்தப்பட்ட கேஎஸ் ரவிக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை குவித்த திரைப்படம் படையப்பா. அந்த படத்திற்கு பிறகு அரசியல் மாற்றமே நடந்தது என்று சொன்னால் மிகையாகாது.

ரஜினியின் கதாபாத்திரத்தை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவான கதாபாத்திரம்தான் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி. மேலும் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

அன்றைய தேதிக்கு அதுவரை வசூல் சாதனைகள் செய்த பல படங்களை முறியடித்து நம்பர் 1 படமாக மாறியது படையப்பா. இந்த படத்திற்கு பிறகு கேஎஸ் ரவிக்குமார் தளபதி விஜய்யை வைத்து மின்சார கண்ணா என்ற படத்தை எடுத்திருந்தார்.

ஆனால் படையப்பா ரேஞ்சுக்கு எதிர்பார்க்கப்பட்ட மின்சார கண்ணா திரைப்படம் தோல்வியை சந்தித்தது. அதற்கான காரணம் என்ன என்பதையும் கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

படையப்பா மாதிரி ஒரு பிரமாண்ட படத்தை கொடுத்துவிட்டு அடுத்ததாக ஒரு சாதாரண படத்தை எடுத்தால் அந்த படத்தின் ரிசல்ட் இப்படித்தான் இருக்கும் என்பதை உணரவைத்த படம்தான் மின்சார கண்ணா எனக் கூறினார் கேஎஸ் ரவிக்குமார். படையப்பாவில் நீலாம்பரி கதாபாத்திரம் போல் மின்சார கண்ணா படத்தில் குஷ்புவின் கதாபாத்திரம் அமைந்தது.

ஆனால் ரம்யாகிருஷ்ணன் அளவிற்கு குஷ்புவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் எடுபடவில்லை. இதனால் தன்னுடைய வெற்றியே தன்னுடைய தோல்விக்கும் காரணமாக அமைந்து விட்டது எனக் குறிப்பிட்டுள்ளார் கேஎஸ் ரவிக்குமார். ஆனால் தற்போது டிவியில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, மின்சார கண்ணா படம் நன்றாகத்தானே இருக்கிறது, ஏன் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறவில்லை? என்ற நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

minsaara-khanna-cinemapettai
minsaara-kanna-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்