அரசியலே வேண்டாமென ரஜினி ஒதுங்க காரணம்.. பின்னாடி இருந்து பங்கம் செய்த பெரும் புள்ளி

சினிமாவில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகர்கள் அந்த அந்தஸ்தை வைத்து அரசியலில் இறங்குகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர், நடிகைகள் அரசியலில் களம் கண்டுள்ளனர். அரசியல் மீது அதிக ஈடுபாடு உள்ளவர்களும் முதலில் சினிமாவையே தேர்ந்தெடுக்கிறார்கள். சினிமாவால் மட்டும்தான் எல்லா தரப்பு மக்களிடையேயும் மிகவும் பரிச்சயமாக முடியும்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருடைய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் சாதனை படைக்கிறது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வர உள்ளதாக பலமுறை அறிவிப்பு வெளியானது. ஆனால் ரஜினி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்குவதை கைவிட்டு உள்ளதாக கூறினார்.

ஆனால் அரசியலை ரஜினி வேண்டாம் என முடிவெடுப்பதற்கு முக்கியமான காரணம் இயக்குனர் கே பாலச்சந்தர். ரஜினியை அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பாலசந்தர்.

அதன்பிறகு கே பாலச்சந்தர் ரஜினியின் பல படங்களை இயக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குருவான பாலச்சந்தர் ஆனந்த விகடனுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அரசியலுக்கு வந்தால் நடிப்பில் கவனம் செலுத்த முடியாது.

தங்களுடைய பெரும்பாலான நேரங்களை அரசியலில்தான் செலவிட முடியும். இதனால் ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என குறிப்பிட்டார். இதனால் ஆரம்பத்தில் ரஜினிக்கு அரசியலில் வர ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய குருநாதர் பேச்சை மீறக்கூடாது என்பதால் அரசியலை கைவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் சென்ற ஆண்டு மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை எனது வழிகாட்டி, எனது குரு கே பாலச்சந்தர் சாருக்கு அர்ப்பணிக்கிறேன் என ரஜினி கூறியிருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்