
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுக்கும் நூறாவது படம் என்பது கனவு. அந்த வகையில் 50வது, 100 வது படங்களை எல்லாம் எப்படியாவது வெற்றிப்படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.
ஆனால் அது எல்லா நடிகர்களுக்கும் ஒர்க் அவுட் ஆகுமா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் தளபதி விஜய்க்கு அவரின் 50வது படமான சுறா படம் மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்தது.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரர் என்ற திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் அந்தப் படம் வெற்றியடைய அதற்கு ஒரு முக்கியமான காரணத்தைச் சொல்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
ரஜினியை சாமியாராக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படவில்லை என்பதுதான் அந்தக் காரணம். தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாகவும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஹீரோவாகவும் பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் திடீரென ஆன்மீகத்தில் இறங்கியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதே போல் தான் சொந்தமாக ரஜினி தயாரித்த பாபா திரைப்படமும் மண்ணைக் கவ்வியது. அதன்பிறகு ரஜினிகாந்த் மக்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தாராம்.
மக்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டாலே பல வெற்றிப்படங்களை கொடுக்கலாம் என்பதில் உறுதியாக இருந்தாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதனால்தான் தற்போது வரை நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
