நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்து வந்த சின்னத்திரை பிரபலங்கள் சிலர், தொடர்ந்து சில நாட்களாகவே திருமணபந்தத்தில் இணைந்து வருகின்றனர். அந்த விதமாக இப்பொழுது பல வருடங்களாக காதலர்களாக இருந்து வந்த சித்து மற்றும் ஸ்ரேயா தற்பொழுது திருமணம் செய்து கொள்ள உள்ளனர். கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த சீரியலில் கதாநாயகனாக சித்துவும் கதாநாயகியாக ஸ்ரேயாவும் நடித்து மக்களிடம் சூப்பர் ஸ்டார் ஜோடிகள் என பெயர் வாங்கினர்.
பிறகு ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் மக்களின் விருப்பப்படி ரியல் ஜோடிகளாக மாறிட எண்ணி காதலித்து வந்தனர். அதை வெளிப்படையாக சமூக ஊடகங்களிலும் பலமுறை அறிவித்தனர். இவ்வாறு காதலர்களாக வலம் வந்த இவர்கள் தற்பொழுது தம்பதிகளாக மாறப் போகிறார்கள்.
கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்டவர் நடிகை ஸ்ரேயா அஞ்சன். இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து திரையுலகில் கால் பதித்தவர். பின்னர் தமிழில் திருமணம் சீரியல் மூலம் தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் கால் பதித்தவர். தற்பொழுது ஸ்ரேயா அஞ்சன் தமிழ்நாட்டின் மருமகளாக மாறப் போகிறார்.
ஏனென்றால் தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்டவர் சித்து, விஜய் டிவியின் பிரபல நடன போட்டியான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்னும் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக இருந்தார். பின் ‘வல்லினம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரை நடிகராக மாறினார்.

தற்பொழுது விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் கதாநாயகன் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் தன்னுடன் நடித்த நடிகை ஸ்ரேயா அஞ்சனை கரம்பிடிக்க போகிறார். சமீபத்தில் தான் ஸ்டார் ஜோடிகளான ஷபானா – ஆரியன் மற்றும் ரேஷ்மா- மதன் தம்பதிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து அடுத்தபடியாக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்த திருமணம் சித்து மற்றும் ஸ்ரேயா அவர்களின் திருமணம்.
இவர்களும் தற்பொழுது தங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக தங்களின் திருமணத்தை அறிவித்து அதற்கான சடங்குகளில் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபட்டுவருகின்றனர். அந்த விதமாக சித்து ஸ்ரேயாவுக்கு நலுங்கு வைத்து மஞ்சள் நீர் ஊற்றி குடும்பத்தாருடன் மகிழ்வது போல வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.