ராஜா ராணி வில்லியா இது.. மாடர்ன் ட்ரெஸில் கலக்கும் அர்ச்சனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனா நகைச்சுவையுடன் வில்லத்தனத்தை கொடுத்து வருகிறார். அதனால் இத்தொடர் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

அர்ச்சனா ஆரம்பத்தில் விஜேவாக பணியாற்றினார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ராஜா ராணி சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர், நடிகைகளுடன் இவர் எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.

இதனாலேயே இன்ஸ்டாகிராமில் அர்ச்சனாவை ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் ராஜா ராணி தொடரில் புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக இருக்கும் அர்ச்சனா தற்போது மாடர்ன் உடையில் உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் நம்ப அர்ச்சனாவா இது நம்பவே முடியவில்லை என கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அர்ச்சனா கருப்பு நிற மினி ட்ரெஸில் ஒரு பைக்கில் சாய்ந்தபடி கொடுத்திருக்கும் போஸ்க்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது.

மேலும் ஆரம்பத்தில் அர்ச்சனா விஜேவாக இருந்தபோது அவரது பற்களுக்கு இடையே இடைவெளி இருந்துள்ளது. இதனால் பல கேலிகளுக்கும் உள்ளாகியுள்ளார். அதன் பின்பு அதை சரி செய்து தனது அழகை மெருகேற்றி கொண்டார். இந்த விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் அர்ச்சனா பகிர்ந்துகொண்டார்.

archana
Archana

மேலும் அர்ச்சனா பாரதிகண்ணம்மா தொடர் கதாநாயகன் அருணை காதலிப்பதாக தகவல் வெளியானது. அர்ச்சனா சொன்னதால் இத்தொடரில் இருந்த அருண் விலகயுள்ளார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை பாரதிகண்ணம்மா தொடரில் அருண் நடித்து வருகிறார்.

archana
Archana

Next Story

- Advertisement -