பட வாய்ப்பு இல்லாததால் ஹோட்டலை கவனித்துக்கொள்ளும் ஜீவா பட நடிகை.. சும்மா கல்லா கட்டுதுல்ல

jiiva
jiiva

80 காலகட்டத்தில் அனைவருக்கும் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அந்த காலத்தில் ராதா உடன் ஜோடி போட்டு நடிப்பதற்கு பல நடிகர்களும் போட்டி போட்டு முன்னிலையில் வரிசை கட்டி நிற்பார்கள்.

அந்த அளவிற்கு இவர் கூட படங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசை பல நடிகர்களுக்கு இருந்தது. ஒரு காலத்திற்குப் பிறகு இவருக்கு மவுசு குறைய சினிமா விட்டு விலகி பிரபல தொலைக்காட்சிகளில் நடுவராக பணிபுரிந்து வந்தார்.

அதிலும் இவர் குறிப்பாக உச்சரிக்கும் அடி தூள் எனும் வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்காததில் ஒன்றாகும். தொலைக்காட்சிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு குறைய திருவனந்தபுரத்தில் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றை கட்டி அதனை கவனித்து வருகிறார்.

ராதாவுக்கு மவுசு குறைய அவரது மகளான கார்த்திகாவை சினிமாத்துறையில் அனுப்பி வைத்தார். கோ எனும் படத்தில் ஜீவாவுடன் முதலில் ஜோடியாக நடித்தார். இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

radha
radha

ஆனால் அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வரவில்லை. இதனால் ராதா தொடங்கி வைத்த ஹோட்டலை தற்போது இவரும் கவனித்து வருகிறார் என சினிமா வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கேட்ட ஒரு சில சினிமா வாசிகள் ராதாவாவது ஒரு காலத்திற்கு அதிகமான படங்கள் நடித்தார். ஆனால் அவரது மகள்கள் ராதா நடித்த அளவிற்கு கூட அதிகமான படங்களில் நடிக்கவில்லை என கூறி வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner