தமிழ் சினிமாவில் சமீப காலமாக மற்ற மொழி நடிகர்களின் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. எப்படி நம்ம ஊரு ஹீரோ படங்கள் மற்ற மொழிகளில் வெளியிடபடுகிறதோ அதே மாதிரி மற்ற மாநில நடிகரின் படங்கள் தமிழில் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் சன் டிவியில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தை தமிழில் அள வைகுண்டபுரம் என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர். இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் எனும் பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 250 கோடி முதல் 270 கோடி வரை செலவு செய்துள்ளார்களாம். அதுமட்டுமில்லாமல் இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாக உள்ளன.
இப்படம் தமிழகத்தின் எல்லையோர ஆந்திர வனப் பிரதேசத்தில் நடைபெறும் செம்மரக்கடத்தல் கதையை மையமாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தில் அல்லு அர்ஜுன் ஒரு தமிழராக நடித்திருக்கிறார் என கூறி வருகின்றனர்.
இப்படத்தின் கதை சிறுகதையான தமிழ் கூலியை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. அதனால் தற்போது இப்படத்தின் மீதான சர்ச்சை கிளம்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழராக நடித்துள்ளார் என்றாள் யாராக நடித்திருப்பார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வெளியானால் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளன.