கர்ணன் கொடுப்பான் என்று பார்த்தால் கெடுத்து விடுவான் போல.. வருத்தத்தில் தயாரிப்பாளர்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படம் என்ன ஆகப் போகிறதோ என்ற குழப்பத்தில் தயாரிப்பாளரான தாணு பித்து பிடித்து அலைவது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் தனுஷின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்த படம் தான் கர்ணன். பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக உள்ளது.

சமீபத்தில் வெளியான கர்ணன் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கர்ணன் படத்தின் டீசரை பார்க்கும் போதே அசுரன் படத்தை போல ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தைரியமாக கையில் எடுத்துள்ளார்கள் என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெளிவாக புரிந்துள்ளது.

மேலும் கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து விட்டனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் தங்களுடைய கொண்டாட்டத்தை தொடங்க இருந்த நிலையில் அதற்கு தடை போட்டு விடுவார்கள் போல.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அதன்பிறகு இரண்டு நாள் இடைவெளியில் கர்ணன் படம் வெளியாக உள்ளது. இதுவே படத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு தான் என்கிறார்கள் விநியோக வட்டாரங்கள்.

karnan-dhanush-cinemapettai
karnan-dhanush-cinemapettai

தேர்தலுக்குப் பிறகு வெகுவாக மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்பதே தற்போதைக்கு பேச்சாக உள்ளது. இது ஒருபுறமிருக்க நாளுக்கு நாள் கொரானா பிரச்சனை அதிகமாகி வருவதால் கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு லாக்டோன் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது போலத்தான் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான தாணு, அவசரப்பட்டு தியேட்டர் ரிலீஸ் என்று அறிவித்து விட்டோமோ என பலத்த யோசனையில் உள்ளாராம். பேசாமல் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை போல நம்மளும் நேரடியாக ஓடிடியில் வெளியிட்டிருந்தால் பிரச்சனையும் இருந்திருக்காது, படத்திற்கும் நல்ல லாபம் கிடைத்திருக்கும் என தன்னுடைய வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம். இருந்தாலும் மாஸ்டர் படத்தைப்போல், அறிவித்த பின்னர் பின்வாங்க முடியாது என்பதால் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் என ரிலீஸில் உறுதியாக இருக்கிறார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்