மறைமுகமாக அஜித், விஜய் செய்யும் தவறு.. மொத்த பித்தலாட்டமும் கல்லாவை நிரப்ப தான்

Ajith-Vijay: ரஜினி, கமல் எப்படியோ அப்படித்தான் அஜித், விஜய் இருவரும் இப்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சோசியல் மீடியா முழுவதும் இவர்களின் அலப்பறையாக தான் இருக்கிறது. ஆனால் சில விஷயங்களை பொருத்தவரை விஜய், அஜித் இருவரும் மறைமுகமாக ஒரே தவறை தான் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதாவது ப்ரோமோஷன் விஷயத்தில் அஜித் எப்போதுமே ஆர்வம் காட்டுவது கிடையாது. படத்தில் நடித்து முடித்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு செல்வதோடு சரி. அதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்ற எந்த நிகழ்விலும் அவர் கலந்து கொள்ள மாட்டார். இதை பல வருடங்களாகவே அவர் ஒரு கொள்கையாகவே வைத்து ஃபாலோ செய்து கொண்டிருக்கிறார்.

Also read: தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த வெங்கட் பிரபு.. ஜோதிகாவை தாண்டி இளம் ஹீரோயினுக்கு அடித்த அதிர்ஷ்டம்

அதேபோன்று சோசியல் மீடியாவிலும் அவர் கிடையாது. இது பல சமயங்களில் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. ஏனென்றால் ஒரு படத்தின் வெற்றிக்கு ப்ரமோஷனும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனாலயே முன்னணி நடிகர்கள் அனைவரும் படத்தை ஓட வைக்க பல வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

ஆனால் அஜித் இதில் ஆர்வம் காட்டாதது ஏற்புடையதாக இல்லை. அதே போல் விஜய்யும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார். ஆனால் படம் பற்றியும் அதில் நடந்த சுவாரசியங்கள் பற்றியும் கூறாமல் குட்டிக்கதை, நண்பா, நண்பி என சில அரசியல் கலந்த பேச்சுக்களை மட்டுமே பேசி விட்டு சென்று விடுவார்.

Also read: வேகம் எடுக்கும் தளபதி 68.. ஒன்று கூடும் ஜாம்பவான்கள், அரண்டு போன லோகேஷ்

அதுவே வசூல் என்று வந்துவிட்டால் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்று சில தயாரிப்பாளர்கள் குமுறி வருகின்றனர். ரஜினியை எடுத்துக் கொண்டால் இசை வெளியீட்டு விழாவையே தன்னுடைய பேச்சின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்.

அதுவே படத்திற்கு மிகப்பெரும் விளம்பரமாக அமைந்துவிடும். கமலும் அதே போன்று தான் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தும் படத்தை ப்ரோமோஷன் செய்வார். அதை பின்பற்றாத விஜய், அஜித் இருவரும் கல்லாப்பெட்டியை நிரப்ப பித்தலாட்டம் செய்வதாக இப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

Also read: 500 கோடி, 1000 கோடி வடையெல்லாம் இனி செல்லாது.. 7 முக்கிய முடிவுகளால் மிரளும் ரஜினி, விஜய்