புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

500 கோடி, 1000 கோடி வடையெல்லாம் இனி செல்லாது.. 7 முக்கிய முடிவுகளால் மிரளும் ரஜினி, விஜய்

Rajini-Vijay: ரஜினி, விஜய் இருவருக்கும் தொழில் ரீதியாக இருக்கும் போட்டி அனைவரும் அறிந்தது தான். அதிலும் ஜெயிலரின் தாறுமாறு வசூலை லியோ முறியடிக்குமா என ஒட்டு மொத்த மீடியாக்களும் ஆர்வத்துடன் உற்று நோக்கி வருகின்றனர். இந்த சூழலில் பாக்ஸ் ஆபிஸ் ஜாம்பவான்களை மிரள வைக்கும் வகையில் ஏழு முக்கிய முடிவுகள் வெளியாக இருக்கிறது.

அதாவது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒன்று கூடி தற்போது தமிழக அரசிடம் சில முக்கிய கோரிக்கைகளை வைக்க இருக்கின்றனர். வருடம் தோறும் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: இருக்குற இடமே தெரியாமல் போன 80ஸ் ஹீரோக்கள்.. ரஜினி அளவுக்கு வந்திருக்க வேண்டிய நடிகர்

அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 வரை ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளை அனுமதிக்க வேண்டும். அதேபோன்று தரமணியில் புதிய பிலிம் சிட்டி மற்றும் கூடுதல் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். இசை வெளியீட்டு விழா போன்ற சினிமா தொடர்பான விழாக்களை நடத்துவதற்கு 25 ஆயிரம் நபர்கள் அமரக்கூடிய அளவிற்கு ஸ்டேடியம் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை திரையரங்குகளிலும் பாக்ஸ் ஆபிஸின் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் கலெக்சன் ட்ராக்கிங் சிஸ்டம் சாஃப்ட்வேர் வைக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இது அமலுக்கு வரும் பட்சத்தில் எங்கள் படம் 500 கோடி, 1000 கோடி வசூலித்து விட்டது என்ற வடையெல்லாம் இனி யாரும் சுட முடியாது.

Also read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

உண்மையான வசூல் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். அந்த வகையில் பலருக்கும் இது சாதகமான விஷயமாக இருந்தாலும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களை மிரள வைக்கும் சம்பவம் ஆகவும் உள்ளது. மேலும் சென்னையில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அதேபோன்று ஒரு படத்திற்கான சென்சார் சான்றிதழ் மும்பைக்கு சென்று ஒப்புதல் பெற்று வருவதற்கு காலதாமதம் ஆவதால் இங்கு ஒரு கமிட்டி அமைத்து சர்டிபிகேட் வழங்க வேண்டும். மேலும் சாட்டிலைட் மற்றும் ஒடிடி நிறுவனங்கள் அறிவிப்பு வெளியான உடனேயே படத்தை வாங்குவது நல்லது. இதன் மூலம் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களும் பலனடைவார்கள் என்பது போன்ற ஏழு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இது விரைவில் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: வேகம் எடுக்கும் தளபதி 68.. ஒன்று கூடும் ஜாம்பவான்கள், அரண்டு போன லோகேஷ்

- Advertisement -

Trending News