வேகம் எடுக்கும் தளபதி 68.. ஒன்று கூடும் ஜாம்பவான்கள், அரண்டு போன லோகேஷ்

Thalapathy 68-lokesh: லியோ ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சோசியல் மீடியா முழுவதும் அதன் ஆதிக்கம் தான் நிறைந்து இருக்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும் தளபதி 68 படம் பற்றிய தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டிருக்கிறது.

அதன்படி கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் ஹீரோயின் ஜோதிகா, பிரியங்கா மோகன், சினேகா என்று கூறி வந்த நிலையில் தற்போது மீனாட்சி சவுத்ரி கமிட் ஆகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இவர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார்.

Also read: சிங்கத்தை சீண்டினால் என்னவாகும்?. இணையத்தில் வெளியான லியோ பட மிரட்டலான கதை

அதேபோன்று ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் இவர்தான் நாயகி. அவரை தான் தற்போது வெங்கட் பிரபு இள வயது விஜய்க்கு ஜோடியாக கமிட் செய்திருக்கிறார். அதேபோன்று மற்றொரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா மறுத்த நிலையில் சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படி ஒவ்வொரு விஷயமும் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் பிரபுதேவா, பிரசாந்த், அரவிந்த்சாமி என சாக்லேட் பாய் ஹீரோக்களும் இதில் இணைய இருப்பது உச்சகட்ட ஆவலை தூண்டி உள்ளது. ஆனால் இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு என்ற ரேஞ்சில் ஒரு சம்பவமும் நடக்க இருக்கிறது.

Also read: தலையில் மிளகாய் அரைக்க பார்த்த லியோ டீம்.. ரிவிட் அடித்த லலித், உறைந்து போய் நிற்கும் விஜய்

அதாவது வெள்ளி விழா நாயகனான மைக் மோகனும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளாராம். 80 காலகட்ட சினிமாவை ஆட்சி செய்த இவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று வீம்பு செய்த நிலையில் இப்போது ஹரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அது இன்னும் வெளிவராத சூழலில் விஜய்க்காக தன் பாலிசியை விட்டுக் கொடுத்த அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

இப்படி வேகமெடுக்கும் தளபதி 68-ஐ பார்த்து லோகேஷ் அரண்டு போய்விட்டாராம். ஏனெனில் லியோவில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அதையே மிஞ்சும் அளவுக்கு பல ஜாம்பவான்கள் இதில் ஒன்று கூடி இருப்பது நிச்சயம் வேற லெவல் சர்ப்ரைஸ் தான். அந்த வகையில் இன்று இதற்கான பூஜை போடப்பட்டு அடுத்த கட்ட வேலைகளும் பரபரப்பாக ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read: தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த வெங்கட் பிரபு.. ஜோதிகாவை தாண்டி இளம் ஹீரோயினுக்கு அடித்த அதிர்ஷ்டம்