Tamil Cinema News | சினிமா செய்திகள்
17 வருட சினிமாவில் முதல்முறையாக பிரபல நடிகருடன் இணைந்த பிரியாமணி.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் புதிய படம்
பருத்திவீரன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் பிரியாமணி. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவரது திரைத்துறை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக பருத்திவீரன் படம் உள்ளது.
பருத்திவீரன் படத்திற்கு பிறகு பிரியாமணிக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளாததால் வாய்ப்பு கிடைக்காமல் பிரபல தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்துகொண்டு அன்றாட வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
பல வருடங்களுக்கு பிறகு பிரியாமணிக்கு வெப் சீரிஸில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்த படத்தில்தான் பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

priyamani cinemapettai
இதுவரைக்கும் சிரஞ்சீவி, பிரியாமணி இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் சிரஞ்சீவியுடன் நடிப்பதால் பிரியாமணிக்கு தெலுங்கில் அதிகமான பட வாய்ப்புகள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என பிரியாமணிக்கு சினிமா வட்டாரங்களில் இருந்து அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
