ஒரே படத்தில் பல கோடி நஷ்டம் ஏற்படுத்திய பிரபுதேவா.. மேடையில் கண்ணீர் வடித்த தயாரிப்பாளர்

பல தயாரிப்பாளர்கள் நடிகர்களை வைத்து பல படங்கள் எடுத்து நஷ்டம் ஏற்பட்டதாக வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தயாரிப்பாளர் கே ராஜன் இடம் பிடித்துள்ளார்.

நானும் சிங்கிள் தான் என்ற பட நிகழ்ச்சிக்கு பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வந்து படத்தினை புகழ்ந்து பேசினர். அப்போது தயாரிப்பாளர் கே ராஜன் தனக்கு ஒரு படத்தால் 85 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக அனைவரும் முன்னிலையிலும் தெரிவித்தார்.

k rajan
k rajan

நானும் சிங்கிள் தான் என்ற படத்திற்கு நான் சிங்கிளாக வந்து இருக்கிறேன் ஏனென்றால் பிரபு தேவாவை வைத்து டபுள்ஸ் எனும் படத்தை நான் தயாரித்தேன் என கூறினார்.

அந்த படத்தில் பிரபுதேவாவும் சிங்கிள், மீனாவும் சிங்கிள், இவர்கள் இருவருக்கும் நடக்கும் காதல் மூலம் இருவரும் இணைந்து டபுள்சாக வாழ்ந்து வருவது தான் கதை, இப்படத்தில் சங்கீதாவும் நடித்திருந்தார்.

doubles
doubles

இந்த கதை தனக்கு பிடித்துப்போக ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்த்து படத்தை முழுவதுமாக தயாரித்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எனக்கு 85 லட்சம் நஷ்டம் தான் ஏற்பட்டது.

மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பதற்கான எண்ணமே வராமல் சிலகாலம் சினிமாவை தவிர்த்து வந்ததாக கூறியுள்ளார். பல நடிகர்களின் படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய் விட்டனர். இப்போது அந்த நஷ்டப்பட்ட பணத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று புலம்பித்தள்ளி விட்டாராம்.

Advertisement Amazon Prime Banner