ஏகே 61 திரைப்படத்தில் இணைந்த சமூக நடிகர்.. அப்ப பிரச்சனை கன்ஃபாம்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் அஜித் பல கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்காக அவர் தன்னுடைய உடல் எடையையும் கணிசமாக குறைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தனுஷுடன் இணைந்து அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு பிரபல நடிகரும் இணைந்திருக்கிறார்.

அதாவது இந்த திரைப்படம் ஒரு பேங்கில் நடக்கும் திருட்டு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்போது பேங்க் ஊழியர்கள் கஸ்டமர்களை டார்ச்சர் செய்வது, கேவலமாக நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த விஷயங்கள்தான் இந்த படத்தில் காட்டப்பட இருக்கிறது.

இப்படிப்பட்ட கதையில் பேங்க் அதிகாரியாக நடிகர் சமுத்திரகனி நடித்து வருகிறார். அவரிடம் இருந்து பணத்தை திருடி அஜித் எப்படி மக்களுக்கு கொடுக்கிறார் என்பது தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இப்படம் பெரிய லெவலில் இருக்கும் என்று தெரிகிறது.

அதிலும் சமுத்திரக்கனி பல திரைப்படங்களில் மக்களுக்கு சமூக கருத்துகளை எடுத்துக் கூறும் கேரக்டரில் நடித்திருக்கிறார். அப்படி அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் அவர் இந்த படத்தில் ஒரு வலுவான கேரக்டரை ஏற்று நடித்து வருகிறார்.

இவர் மட்டுமல்லாமல் இன்னும் சில முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழு இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகிறது.

Next Story

- Advertisement -