Connect with us
Cinemapettai

Cinemapettai

poove-unakaga-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பூவே உனக்காக படத்தில் நடித்த சங்கீதாவா இது? சோடாபுட்டி, கொஞ்சம் வெயிட் எல்லாம் போட்டு ஆளே மாறிட்டாங்களே!

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு மிகப்பெரிய நடிகராக தளபதி விஜய் வலம் வந்தாலும் அவருக்கு முதன்முதலில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் அது பூவே உனக்காக தான்.

விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்த படம் தளபதி விஜய்யை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது. மேலும் அதிகமான குடும்ப ரசிகர்களையும் பெண் ரசிகர்களையும் விஜய்க்கு கொடுத்த படம்.

மேலும் இந்த படத்தில் பல முன்னாள் ஜாம்பவான்கள் நடித்தனர். குறிப்பாக நாகேஷ், நம்பியார் போன்றோரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பூவே உனக்காக படத்தில் நடிகை சங்கீதா துருதுருவென சேட்டை செய்யும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் அதிக நாட்கள் ஓடிய படமாகவும், அதிக வசூலை எடுத்த படமாகவும் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சினிமா விகடன் நண்பர்கள் நடிகை சங்கீதாவை சமீபத்தில் பேட்டி எடுத்துள்ளனர். அப்போது பார்ப்பதற்கு அடையாளமே தெரியாத அளவுக்கு சோடாபுட்டி, கொஞ்சம் வெயிட் எல்லாம் போட்டு ஆளே மாறிவிட்டார் சங்கீதா.

sangeetha-actress-cinemapettai

sangeetha-actress-cinemapettai

சங்கீதா தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் தன்னை விட வயது கொஞ்சம் அதிகமான நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தார். அவர் முதன்முதலில் சம வயது நடிகருடன் ஜோடி போட்டது விஜய்யுடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கீதா, பூவே உனக்காக படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் கூடுதல் தகவல்.

Continue Reading
To Top