கேவலமாய் தோற்ற சென்னை.. முதல் போட்டியிலேயே அசிங்கப்பட்ட தோனி

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் மும்பையில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்தது. முதல் போட்டியிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னையும், கொல்கத்தாவும் மோதின.

சென்னை அணியில் தோனி, இந்த முறை கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா விற்கு விட்டுக் கொடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியை காண மொத்த அரங்கமும் நிரம்பி வழிந்தது.

டாஸ் வென்ற கொல்கத்தா, சென்னையை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ஆரம்பத்திலிருந்தே விக்கெட்களை இழந்து சென்னை அணி தடுமாறியது. ஒரு கட்டத்தில் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டுகிறேன் என்ற பெயரில் அணியின் தோல்விக்கு அடித்தளம் போட்டனர்.

இருவரும் டெஸ்ட் போட்டிகளை போல இந்த போட்டியை மட்டை போட்டு விளையாடினர். அதுவும் தோனி வழக்கம்போல் தனது மட்டை பாணியை கடைபிடித்தார். தோனி கடைசியில் ஓரிரு பவுண்டரிகளை அடித்தாலும் அதுவும் பயனில்லாமல் போனது.

ரன்கள் குவிக்க கூடிய இந்த மைதானத்தில் ஆமை வேக பேட்டிங்கினால் சென்னை அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே குவித்தது. இவர்கள் கடைசி வரை நின்று எதற்கு விளையாடுகிறார்கள் என்று தெரியாமலேயே விளையாடினர்.

பொதுவாக 20 ஓவர் போட்டிகளில் அனைவரும் இறங்கி அடித்தாலே 130 ரண்கள் சர்வ சாதாரணமாக வந்துவிடும். இதற்கு இவர்கள் அடித்து விளையாடி இருக்கலாம். நாங்களே அடித்து விடுவோம் என்று கடைசிவரை இவர்கள் மட்டை போட்டு விளையாடினார்கள். இதனால் சென்னை ரசிகர்கள் பெரிதும் எரிச்சல் அடைந்தனர்.

அதன்பின் இறங்கிய கொல்கத்தா அணி அசால்டாக 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று அசத்தியது. முதல் போட்டியிலேயே தோனி தனது மோசமான பேட்டிங் செய்து அசிங்க பட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்