கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றை தெளிவாக விளக்கிய அந்த நாவல் தற்போது மணிரத்தினம் அவர்களால் படமாக்கப்பட்டுள்ளது.
எத்தனையோ பிரபலங்கள் இதை திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தும் அது இப்போது மணிரத்தினத்தால் சாத்தியமாகி இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் படத்தில் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இயற்பெயரான அருண்மொழிவர்மன் என்ற பெயர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது கல்கி தன்னுடைய நாவலில் அவருடைய பெயரை அருள்மொழிவர்மன் என்று தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பட குழு அந்த போஸ்டரை வெளியிடும் பொழுது அருண்மொழிவர்மன் என்றுதான் குறிப்பிட்டிருந்தனர். இதைப் பார்த்த ரசிகர்கள் படக்குழு தவறு செய்து விட்டதாக கூறி வருகின்றனர்.
இதற்கு தற்போது ஒரு விளக்கத்தை படகுழு கொடுத்துள்ளது. அதாவது தமிழ் இலக்கண முறைப்படி அருள்மொழி என்ற பெயர் அருண்மொழிவர்மன் என்று தான் எழுதப்பட வேண்டும் என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதைப் பற்றி குறிப்பிட்டுள்ள படக்குழு மேலும் சில விஷயங்களையும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. அதாவது சோழர் கால செப்பு தகடுகளில் ராஜராஜ சோழ மன்னனின் பெயர் அருண்மொழி வர்மன் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதன் மூலம் பல நாட்களாக இருந்த குழப்பத்திற்கு மணிரத்தினம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் நாவல்கள் மற்றும் சில வலைதளங்களில் அருள்மொழிவர்மன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்து தான் ரசிகர்கள் இப்படி ஒரு கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். தற்போது இந்த குழப்பத்திற்கு சரியான விளக்கம் கிடைத்ததை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.