வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அழகு தேவதையாய் இருக்கும் திரிஷா.. பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான போஸ்டர்

பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் நல்லபடியாக எடுத்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் மணிரத்னமும் இணைந்து தயாரித்திருக்கிறார்.

ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உலகெங்கும் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸாகவுள்ளது. இதனால் இந்தப் படத்தை குறித்த ஆர்வத்தை ரசிகர்களிடம் அதிகப்படுத்துவதற்காகவே படத்தில் நடித்த கேரக்டர்களின் போஸ்டரை படக்குழு வரிசையாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் ஏற்கனவே சியான் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் ஆதித்த கரிகாலன் கேரக்டரின் லுக் வெளியானது. அதைத்தொடர்ந்து வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தி கேரக்டர் லுக் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கேரக்டர் போன்றவை வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதைத்தொடர்ந்து நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் இளவரசி குந்தவை கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் திரிஷா எழில் கொஞ்சும் அழகுடன் தேவதையாக பேரழகியாக மிளிர்கிறார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் திரிஷாவின் அழகை குறித்து பக்கம் பக்கமாக வர்ணிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதைப்படி வந்தியத்தேவனின் மனைவிதான் குந்தவை. அப்படிப்பார்த்தால் கார்த்திக்கு ஜோடியாக திரிஷா இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து நாளை அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியாக போகிறது.

இவர்கள் மட்டுமல்ல இந்த படத்தில் சுந்தரசோழன் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன், பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் என தமிழ் தெலுங்கு இந்தி முன்னணித் பிரபலங்களும் இணைந்து நடித்திருப்பதால் அவர்களது கதாபாத்திரத்தின் லுக்கும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மிகைப்படுத்த போகின்றனர்.

Trisha-cinemapettai
Trisha-cinemapettai
- Advertisement -

Trending News