Connect with us
Cinemapettai

Cinemapettai

ramarajan-legend-annachi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராமராஜனுக்கு போட்டியாக இறங்கிய லெஜன்ட்.. அடுத்த படத்திற்கு தயாரான அண்ணாச்சியின் புகைப்படங்கள்

அவரது கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் ராமராஜனுக்கு டஃப் கொடுப்பார் நம்ம அண்ணாச்சி என கிண்டல் செய்து வருகிறார்கள்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் அண்ணாச்சி தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்பம் முதலே ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்து வந்தனர். மேலும் தாறுமாறாக தி லெஜண்ட் படம் ட்ரோல் செய்யப்பட்டது. ஆனால் படத்திற்கு வந்த விமர்சனமே ப்ரோமோஷன் ஆக அமைந்தது.

இதனால் தி லெஜண்ட் படம் நல்ல வசூலை ஈட்டியது. ஆனால் பல மாதங்களாக ஓடிடியில் விலை போகாமல் இருந்த தி லெஜண்ட் சமீபத்தில் பிரபல ஓடிடியில் வெளியானது. அதுமட்டுமின்றி சமீபத்தில் காஷ்மீரில் இருந்து ஒரு வீடியோ ஒன்றை அண்ணாச்சி வெளியிட்டு இருந்தார்.

Also read: விஜய் படம் என்ற தெனாவெட்டில் இருந்த வெங்கட் பிரபு.. கஸ்டடியால் ஒரே அடியாய் கவிழ்த்து விட்ட AGS

இதனால் தளபதி விஜய்யின் லியோ படத்தில் இவர் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில் கலர் கலராக ஆடை அணிந்து அண்ணாச்சி தனது சமூக வலைத்தளத்தில் போட்டோவை வெளியிட்டு வருகிறார். அவரது கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் ராமராஜனுக்கு டஃப் கொடுப்பார் நம்ம அண்ணாச்சி என கிண்டல் செய்து வருகிறார்கள்.

ராமராஜனுக்கு போட்டியாக இறங்கிய லெஜன்ட்

legend-annachi

legend-annachi

ஏனென்றால் ஒரு கால கட்டத்தில் ராமராஜன் தான் கலர் கலரான ஆடை அணிந்து படத்தில் நடித்து வந்தார். இதனாலேயே இவர் பிரபலமும் ஆனார். இந்த ட்ரிக்கை அப்படியே அண்ணாச்சி பயன்படுத்தி வருகிறார். ராமராஜனுக்கு போட்டியாக கலர் கலரான கோர்ட் சூட்டுடன் போட்டோ சூட் நடத்தி உள்ளார்.

Also read: தனுஷின் ரீல் அண்ணன் விஜய் சேதுபதிக்கு செய்த துரோகம்.. அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதை

அதுமட்டுமின்றி இப்போது உடல் எடையை குறைத்து உள்ளார் அண்ணாச்சி. இதற்கு காரணம் அடுத்த படத்திற்காக தன்னை மேலும் இளமையாக காட்ட இவ்வாறு அண்ணாச்சி செய்துள்ளாராம். தற்போது லெஜண்ட் அண்ணாச்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

லெஜண்ட் அண்ணாச்சி

saravana-legend

saravana-legend

Continue Reading
To Top