சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா விறுவிறுப்பாக நடித்து வரும் திரைப்படம் சூர்யா 40. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இது ஒருபுறமிருக்க சூர்யா 40 படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் சூரரைப்போற்று படத்தின் வெற்றி என்று கூட சொல்லலாம்.
அதனைத் தொடர்ந்து சூர்யா 40 படத்தில் சூர்யாவின் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியது. கிராமத்து திரைப்படம் என்கிறார்கள், அப்புறம் ஏன் சூர்யா கையில் வாளுடன் வருகிறார் என்ற கேள்வியே ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கார்த்தி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த பாண்டிராஜிடம், சூர்யா ரசிகர்கள் சூர்யா 40 படம் எப்படி இருக்கும் என்பதை பற்றி கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு பாண்டிராஜ், கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தை எப்படி ஒவ்வொரு காட்சியாக கொண்டாடினீர்களளோ, அதேபோல் சூர்யாவின் சூர்யா 40 படத்தையும் கொண்டாடுவீர்கள் எனக் கூறி ரசிகர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.