இந்து கடவுளை அவமதித்த மலக்குழி மரணம்.. கொந்தளித்து போய் அறிக்கை விட்ட பா ரஞ்சித்

பா ரஞ்சித் இப்போது விக்ரமை வைத்து தங்கலான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து விக்ரமின் கேரக்டர் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க பா ரஞ்சித் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி விடுவார். அப்படித்தான் தற்போது இவருடைய உதவியாளர் மீது வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது. அதாவது சில தினங்களுக்கு முன்பு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு அரங்கில் விழா ஒன்று நடைபெற்றது. அதில் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனரான விக்னேஸ்வரன் என்ற விடுதலை சிகப்பி ஒரு கவிதையை வாசித்திருந்தார்.

Also read: திடீரென நிறுத்தப்பட்ட தங்கலான் படப்பிடிப்பு.. என்னதான் ஆச்சு மருத்துவமனையில் விக்ரம்

மலக்குழி மரணம் தொடர்பான அந்த கவிதையில் இந்து கடவுள்களான ராமர், சீதை, அனுமன் ஆகியோரை அவர் அவமதித்து விட்டதாக பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. இது தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் பா ரஞ்சித் அதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது, ஒரு விழிப்புணர்வுக்காக தான் கடவுளை வைத்து அந்த கவிதை சொல்லப்பட்டது. மற்றபடி யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ஒரு எழுத்தாளரின் கருத்து சுதந்திரம் அது. ஆனால் அது இப்போது மத பிரச்சினையாக மாறி இருக்கிறது. கடந்த சில நாட்களாக விடுதலை சிகப்பி பல அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.

Also read: வெளிவந்தது தங்கலான் படத்தின் உண்மை கதை.. பல ரகசியம் அடங்கிய டைட்டிலை வைத்த பா ரஞ்சித்

கிராமத்தில் இருக்கும் அவருடைய பெற்றோரும் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு படைப்பின் மையப்பொருளை உணராமல் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள காவல் துறை மற்றும் தமிழக அரசை கண்டிக்கிறேன் என அவர் கொந்தளித்து போய் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறி இருக்க வேண்டும் என்றால் அது மலக்குழி மரணம் பற்றியதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அதை மத பிரச்சினையாக திசை மாற்றியதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த கவிதையில் இயேசு, அல்லா போன்ற கடவுள்களை பற்றி பேசி இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. இதன் மூலம் ஒரு படைப்பாளியின் அறிவு மோசமாக இருக்கிறது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also read: மேடையில் மயிரை வைத்து விக்ரமை வாரிவிட்ட பார்த்திபன்.. தங்கலான் கொடுத்த பதிலடி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்