டாக்டர் படத்தை வாங்கிய ஒடிடி.. கை மேல காசு! தயாரிப்பாளர் காட்டுல மழை

கொரோனா பிரச்சனைக்கு அப்பறம் தியேட்டர்களுக்கு இருக்குற மவுசு குறைந்து விட்டது என்று தான் கூற வேண்டும். முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி கூட்டத்தில் நுழைந்து நம்ம பேவரைட் ஹீரோவோட படத்தை பார்க்குற பீலே தனி தான். ஆனால் எப்போ ஓடிடி வந்ததோ அப்போவோ இதெல்லாம் போச்சுனு தான் சொல்லனும்.

கொரோனா பிரச்சனை காரணமா தியேட்டர மூடினது இவங்களுக்கு வசதியா போயிடுச்சு. அந்த கேப்ல வந்து எல்லா படத்தையும் வாங்கி ஓடிடியில வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. மக்களும் வீட்ல இருந்தே சொகுசா பார்க்கலாமேனு ஓடிடில படங்களை பார்க்க பழகிட்டாங்க.

சரி தியேட்டர் திறக்குற வரைக்கும் தான் ஓடிடி வெளியீடு இருக்கும்னு நினைச்சா தியேட்டர் திறந்த பிறகும் நிறைய படங்கள் ஓடிடில தான் வெளியாகுது. அதுமட்டுமா ஏற்கனவே தியேட்டர்ல வெளியான படத்தையும் மறுபடியும் ஓடிடில வெளியிடறாங்க. என்ன கொடுமை சரவணன் இது?

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். இயக்குனர் நெல்சன் – நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தோட சாட்டிலைட் உரிமையை சன் டிவி ஒரு பெரிய தொகைக்கு வாங்கிடுச்சாம்.

இந்நிலையில டாக்டர் படத்தோட ஓடிடி உரிமைய பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கிருக்காம். அதுவும் சும்மா இல்லைங்க சுமார் 11 கோடி ரூபாய் கொடுத்து டாக்டர் படத்தோட ஓடிடி உரிமைய நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்காம். டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பயங்கர லாபம் பார்த்து வருகிறதாம். அப்பறம் என்ன தயாரிப்பாளர் காட்டுல மழை தான்.

doctor-cinemapettai
doctor-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்