தமிழ்நாட்டில் வசூலை குவித்த வேறு மொழி இந்திய படங்கள்.. ஆட்டம் கண்ட தமிழ் சினிமா

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது சினிமா பேட்டை வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமாக் கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த மாற்று மொழி இந்திய திரைப்படங்கள். நாம் கணக்கெடுப்பது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களை மட்டுமே. வாருங்கள் சற்று விரிவாக பார்ப்போம்.

பாகுபலி: வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்கள் என்னும்போது பாகுபலிக்கு இடமில்லாமல் எப்படி. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் அனுஷ்கா தமன்னா நாசர் ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்த பாகுபலி திரைப்படம் தெலுங்கு சினிமாவில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல இரண்டு பாகங்களாக வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபாஸுக்கு தந்தை-மகன் என இரட்டை வேடம் மேலும் இந்தப்படத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் சத்யராஜ் அவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தெலுங்கு பதிப்பில் வெளியான பாகுபலி 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசூலை தமிழ் பதிப்பில் வெளிவந்த பாகுபலி உடன் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

லூசிபர்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் நடிப்பில் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கிய திரைப்படம் தான் லூசிபர். அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ஆன லூசிபர் பல சுவாரசியமான திருப்பங்களைக் கொண்டது இந்த படத்தில் மோகன்லால் அவர்கள் அதிரடி ஆக்சன் புகுந்து விளையாடியிருப்பார் மேலும் அவருடன் பாசமான ஒரு நடிப்பையும் வழங்கியிருந்தார் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படாமல் வெளிவந்த இந்த படம் பத்து கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

பிரேமம்: நிவின் பாலி சாய் பல்லவி மடோனா செபாஸ்டின் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பிரேமம். ஜார்ஜ் என்பவனின் மூன்று வெவ்வேறு காலகட்ட காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்லி இருந்தார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். 2015 இல் வெளியான இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் 100 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டது. 7கோடி ரூபாய் வரை தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் வசூலித்ததாக தெரிவிக்கின்றனர்.

அள வைகுண்டபுரலூ: அல்லு அர்ஜுன் பூஜா ஹெக்டே உட்பட பலர் நடித்த இந்த குழந்தை மாற்ற காதல் கதை சுவாரசியமான திருப்பம் கொண்டிருந்த காரணத்தால் மிகப் பெரும் வரவேற்பை தமிழ்நாட்டிலும் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற முட்டபொம்மா பாடல் மிகவும் பிரபலம். 8 கோடி ரூபாய் வரை தமிழகத்தில் இந்த திரைப்படம் வசூலித்ததாக கூறப்படுகிறது

சென்னை எக்ஸ்பிரஸ்: ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோனே சத்யராஜ் மற்றும் பலர் நடித்த இந்தப் பொழுதுபோக்கு திரைப்படம் தமிழகத்தில் 6.5 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. சாருக் கான் அவர்களின் இளமைத் துள்ளலான நடிப்பை பார்ப்பதற்காகவே பெரும் கூட்டம் தியேட்டர்களை அலைமோதியது என்று சொன்னால் அது மிகையல்ல.

ஏக் துஜே கேலியே / மரோ சரித்ரா: கமல்ஹாசன் ரதி மாதவி நடித்த இந்தி திரைப்படமான ஏக் துஜே கேலியே திரைப்படத்தை கே பாலசந்தர் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த படம் மரோ சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். தீவிர காதல் கதையான இந்த படத்தை ரசிகர்கள் அப்போது தலையில் வைத்து கொண்டாடினார்கள். சென்னையில் மட்டும் இந்த படம் 200 நாட்களுக்கு மேல் ஓடியதாக வரலாறு கூறுகிறது.

கே ஜி எஃப்: இந்த லிஸ்டில் கேஜிஎப் திரைப்படத்தை வைக்க இயலாது. காரணம் கன்னட படங்கள் எதுவும் கன்னடத்தில் ஏ தமிழில் வெளியாவதில்லை பெரும்பாலும் அவர்களே திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் கேஜிஎப் மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழகத்தில் வெளிவந்தது. மிகப் பெரும் வெற்றியையும் பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகமும் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளை கலக்கி கொண்டிருக்கிறது.

கோகிலா: 1997ல் இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் கோகிலா. இந்த கன்னடப் படத்தில் கமல்ஹாசன் சோபா ரோஜாரமணி போன்றோர் நடித்திருந்தனர். எதில்தான் நடிகர் மைக் மோகன் முதன் முதலில் அறிமுகமானார். சென்னையில் மட்டும் 100 நாட்களுக்கு மேல் இந்தப் படம் ஓடியதாக தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தை பாலுமகேந்திரா அவர்கள் மலையாளம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்தார். அங்கும் இதில் திரைப்படங்கள் வெற்றி வாகை சூடின.

Next Story

- Advertisement -