Entertainment | பொழுதுபோக்கு
எம்ஜிஆர் தன் பாணியில் நடிக்காத ஒரே படம்.. வித்தியாசமான கோணத்தில் தலைவரை நடிக்க வைத்த ஏவிஎம்
எம்ஜிஆர் 136 படங்களில் நடித்து அசத்தியவர். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின்னர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இன்றளவும் இவரது தனித்துவமான நடிப்பிற்காக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் எம்ஜிஆர் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்திற்கும் ஒரு பெரிய அளவு ரசிகர் பட்டாளமே உண்டு. இவரைப் பார்த்து எம்ஜிஆர் போல் நாமும் ஆக வேண்டும் என்று அப்பமே சுற்றித்திரிந்த ரசிகர்கள் பலபேர் இருக்கின்றனர். பிறகு எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
Also Read : ஜெயலலிதாவை சுத்தி சுத்தி வந்த நடிகர்.. துப்பாக்கியை காட்டி மிரட்டிய எம்ஜிஆர் பின் கலைஞரிடம் தஞ்சம்
சினிமாவில் இவருக்கு இருந்த ரசிகர் பட்டாளம், புகழ் போன்றவற்றால் இவர் எளிதில் மக்களிடையே சென்றடைந்தார். எம்ஜிஆருக்கு எப்பொழுதுமே ஒரு தனித்துவமான நடிப்பு உண்டு. எல்லா இயக்குனர்களும், எம்ஜிஆருக்கு என்று ஒரே பாணியில் கதையை எழுதி ஹிட் அடித்து விடுவார்கள்.
ஒரே டெம்ப்ளேட்டில் உருவான கதைகளேயே எம்ஜிஆருக்கு கடைபிடிக்கப்பட்டது. அப்படி போய்க்கொண்டிருந்த எம்ஜிஆரின் திரையுலக பயணத்தில் ஒரு படம் மற்றும் வேறு விதமான ஜெனரீல் எடுக்கப்பட்டது. அதுவும் சூப்பர் ஹிட்டாகி எம்ஜிஆர் இப்படி எல்லாம் நடிப்பாரா என்று பெரும் அளவில் பேசப்பட்டது.
1966ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த படம் அன்பே வா. இந்த படம் ஒரு முழு நீள காமெடி படமாக எம்ஜிஆருக்கு அமைந்தது. எம்ஜிஆர் தன் பாணியில் மாறுபட்டு நடித்த ஒரே படம் இதுதான். எம்ஜிஆர், சரோஜாதேவி, அசோகன், நாகேஷ் மனோரமா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது.
ஏவிஎம் தயாரித்த முதல் கலர் படம் இதுதான். ஈஸ்ட்மென் கலர் எனப்படும் கலர் ஃபார்முலாவில் உருவானது அன்பே வா படம். சிம்லா ஊட்டி என முழுக்க முழுக்க குளிர் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் எம்ஜிஆருக்கு ஒரு சூப்பர்ஹிட் படமாகஇது அமைந்தது.
Also Read : ஒரே நாளில் 3 மற்றும் ஒரே நேரத்தில் 34 படங்களின் ஷூட்டிங்.. எம்ஜிஆர் செல்லப்பிள்ளையின் சாதனை
