கிரிக்கெட் வீரரை வளைத்து போட்ட நம்பர் நடிகை.. திரும்பிய பக்கமெல்லாம் அதிர்ஷ்டம்தான்

நடிப்பு, பிசினஸ், தயாரிப்பு என்று படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நம்பர் நடிகை. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நம்பர் நடிகை தற்போது தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார். அதிலும் நடிகைக்கு ஏறுமுகம் தான்.

சமீபத்தில் நடிகை தன்னுடைய காதலருக்கு அந்த பிரபல நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் தனக்கு ஈடாக அதே சம்பளத்தை அந்த பெரிய நிறுவனத்திடம் பேசி காதலருக்கும் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த தகவல் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது நம்பர் நடிகை பிரபல கிரிக்கெட் வீரரை இம்ப்ரஸ் செய்து வாய்ப்பு வாங்கி இருக்கிறார். தற்போது அந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கு சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அவர் அந்த நடிகையின் தீவிர ரசிகராம்.

அந்தவகையில் நடிகையின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்த படத்தை பார்த்து பிடித்துப்போன கிரிக்கெட் வீரர் நடிகைக்கே போன் செய்து பாராட்டியிருக்கிறார். அப்போது நடிகை தன்னுடைய பிசினஸ் மூளையை பயன்படுத்தி அவரிடம் நீங்கள் ஏன் படம் தயாரிக்க கூடாது என்று பேசியிருக்கிறார்.

ஏற்கனவே அப்படி ஒரு ஐடியாவில் இருந்த கிரிக்கெட் வீரர், தற்போது தான் தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோயினாக நம்பர் நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். இதன் மூலம் நம்பர் நடிகை போட்ட பிளானுக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.

மேலும் அந்த கிரிக்கெட் வீரரின் தீவிர ரசிகரான நடிகையின் காதலரே இந்த படத்தை இயக்குவாரா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் நடிகை அந்த வாய்ப்பையும் காதலருக்கு வாங்கிக் கொடுத்துவிடுவார் என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. இப்படி திரும்பும் பக்கமெல்லாம் நம்பர் நடிகைக்கு அதிர்ஷ்டக் காற்று வீசுவதை சக நடிகைகள் பொறாமையுடன் பார்த்து வருகின்றனர்

Next Story

- Advertisement -