சினிமாவைப் பொறுத்த வரையில் நடிகைகளிடம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள் போன்றோர் அத்துமீறுவது ஒன்றும் புதிதல்ல. இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் இந்த பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கிறது.
என்னதான் பல பேர் அவர் என்னை அப்படி செய்தார், இவர் என்னை இப்படி செய்தார் என போற பக்கம் எல்லாம் பேட்டி கொடுத்து கதறினாலும் இன்னமும் நடிகைகளிடம் சில்மிஷங்கள் செய்வது குறையவில்லை.
அதுவும் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகைகள் அதைப் பற்றிக் கூறும் போது மனம் நொந்து விடுகிறார்கள். இவ்வளவு ஏன் அனுஷ்கா முதல் நயன்தாரா வரை பலரும் இது போன்ற பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ள நிவேதா பெத்துராஜ் மீடு பிரச்சனையில் தானும் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை மிகப்பெரிய பார்ட்டி ஒன்றுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அங்கே சென்றதாகவும், பார்ட்டியில் ஒரு பெரிய பிரபலம் தன்னை தவறான இடங்களில் தொட்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் வழக்கம் போல் இவரும் அவர் யார் என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல் முன்னணி பிரபலம் அது, இது என குறிப்பிட்டுள்ளது பலருக்கும் புரியாத புதிராக அமைந்துவிட்டது. சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நிவேதா பெத்துராஜுக்கு அங்கு ஏதேனும் நடந்திருக்குமா? எனவும் கருதுகின்றனர்.
