திருமணத்திற்கு முட்டுக்கட்டை போடும் கள்ளக்காதலன்.. ஐபிஎஸ் மூளைக்கு வேலை கொடுத்த சந்தியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ராஜா ராணி 2. தற்போது இத்தொடரில் புது சந்தியா வந்தவுடன் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் சரவணனின் தங்கை பார்வதிக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் ஆக உள்ளது. ஆனால் பார்வதி முகத்தில் ஏதோ ஒரு குழப்பத்துடன் இருக்கிறாள் என்பதை சந்தியா உணர்கிறாள்.

அதாவது பார்வதியின் முன்னாள் காதலன் விக்கி தற்போது பார்வதியைப் மிரட்டி வருகிறான். இவர்கள் காதலித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனுப்பி திருமணத்திற்கு முன்பு என்னோடு இருக்க வேண்டும் என பார்வதியை விக்கி மிரட்டுகிறான். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் உச்சகட்ட பயத்தில் உள்ளார் பார்வதி.

இதையறிந்த சந்தியா, பார்வதியிடம் உன் அண்ணன் பேச வேண்டும் என அழைத்து செல்கிறாள். சரவணன் பார்வதியிடம் ஏன் சோகமா இருக்க என கேட்க, விக்கி மிரட்டுவதை பார்வதி சொல்கிறாள். இதனால் சந்தியா என்ன பிரச்சினையாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என தைரியம் கூறினார்.

மேலும், சந்தியா நாம நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் அதுதான் அவங்களுக்கு கொடுக்கிற சரியான பதிலடி என தைரியம் கூறுகிறார். இதனால் பார்வதி தற்போது மன தைரியத்துடன் திருமணத்திற்கு தயாராகிறார்.

இதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சனாவை பார்த்த சந்தியா, பார்வதி திருமணத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் உன்னை சும்மா விடமாட்டேன் என மிரட்டுகிறார். இதனால் அர்ச்சனா என்ன செய்வது என்று தெரியாமல் வாயடைத்து போகிறார்.

மேலும் இந்த விக்கியை எப்படி ஒழித்துக் கட்டுவது என சந்தியா தனது ஐபிஎஸ் மூளையை ஆராய்ந்து வருகிறார். எது எப்படியோ சந்தியா, சரவணன் இருவரும் நல்லபடியாக பார்வதியின் திருமணத்தை நடத்தி வைப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

Next Story

- Advertisement -