விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் தன்னுடன் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே பாரதியை தீவிரமாக காதலித்து வந்த வெண்பா, பாரதிக்கு திருமணம் ஆன பிறகும் அவனை விட்டு வைக்கவில்லை.
பாரதியை அவனுடைய மனைவி மகளிடமிருந்து பிரிக்க படு கேவலமான செயல்கள் அனைத்தையும் செய்து, சுமார் ஒன்பது ஆண்டுகளாக மனைவி மகளுடன் சேர்ந்து வாழ விடாமல் பாரதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வெண்பா வைத்திருக்கிறாள்.
ஆனால் எப்படியாவது பாரதியின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் எடுத்த அத்தனை முயற்சியும் செல்லுபடியாகவில்லை. எப்படி இருந்தாலும் பாரதி எனக்குத்தான்.
அப்படி இல்லை என்றால் அவனுடைய மனைவியுடன் வாழ விடமாட்டேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் வெண்பாவிற்கு ஜோசியக்காரர் அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருக்கிறார். ஏனென்றால் வெண்பாவின் வீட்டு வேலைக்காரி சாந்தி வீட்டிற்கு ஜோசியக்காரர் அழைத்து வர, அங்கு வந்த ஜோசியக்காரர் உங்களுக்கு கல்யாணம் யோகம் கூடி வந்திருக்கிறது.
அப்படி என்றால் காதலுக்கும் பாரதியை வெண்பா திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா? என சாந்தி கேட்க, நீங்கள் விரும்புபவர் அல்ல, உங்களை விரும்புபவர் என ஜோசியக்காரர் என அதிர்ச்சியான தகவலை தெரிவித்திருக்கிறார்.
இதன்பிறகு பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதிக்கு போட்டியாக வேறு ஒரு கதாநாயகன் என்ட்ரி தரப்போகிறார். வரவிருக்கும் புதிய கதாபாத்திரம் வெண்பாவை அடக்கி ஒடுக்கி அவளுடைய ஆட்டத்தை அடக்கும் நபராக இருப்பாரா அல்லது அடங்கிப் போகும் நபராக இருப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.