சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அட இவர் புதுசுங்க! நேற்றுதான் சேர்ந்தார்.. வாரிசு படத்தில் இணைத்த தரமான நடிகர்

சூட்டிங் எவ்வளவு நாள் நடக்கிறதோ, அவ்வளவு நாளும் சூட்டிங்கிற்கு ஒரு, ஒரு புது நடிகர் வருவார்கள் போல். விஜய் நடித்துக் கொண்டிருக்கும் வாரிசு படத்தில் இப்போது ஒரு புது நடிகர் இணைய இருக்கிறார். அவருக்கு இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாம்.

இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்கனவே ஒரு தெலுங்கு மாஸ் நடிகர் இணைய இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் காலை வாரி விட்டதால் இப்பொழுது பிரபல தமிழ் வில்லன் நடிகர் ஒருவர் இணைகிறார்.

வாரிசு படத்தில் ஏகப்பட்ட நடிகர் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இது விஜய் கேரியரில் வித்தியாசமான ஒரு படமாக இருக்கும் எனவும் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு குடும்பபாங்கான திரைப்படம். ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளும், தீர்வுகளும் தான்.

இப்பொழுது தமிழ் படங்களில் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர்தான் இப்பொழுது வாரிசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு இவர்தான் என்று கூறிவருகின்றனர். இவரின் வருகை படத்தை இன்னும் மெருகேற்றும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே நடிப்பில் மிரட்டும் எஸ்ஜே சூர்யா மாநாடு படத்திற்கு பின் வேற லெவலில் மாறிவிட்டார். விஜய்க்கு இவர் வில்லனாக மெர்சல் படத்தில் மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய் தான் சற்று தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் நட்சத்திர பட்டாளங்கள் நிறைய இருப்பதால் யாராவது ஒருவர் நடிப்பில் விஜய்யை ஓவர்டேக் செய்து விடுவார்கள் என்பது ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.

- Advertisement -

Trending News