இப்படியும் ஒரு பார்ட்டியா.? விஜய் வீட்டில் அப்படி நடந்துகொண்ட நெல்சன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே சன் டிவி பேட்டியில் விஜய் கலந்து கொண்டார். அதில் நெல்சன் பீஸ்ட் படம் சக்சஸ் ஆகி விட்டால் எங்களுக்கு சக்சஸ் பார்ட்டி கொடுப்பீர்களா என கேட்டிருந்தார்.

பீஸ்ட் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சக்கை போடு போட்டது. இதனால் பீஸ்ட் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் பீஸ்ட் படக்குழுவிற்கு பார்ட்டி கொடுத்து இருந்தார். இதில் இயக்குனர் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த சக்சஸ் பார்ட்டி பிரமாண்டமாக 5 ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் நடக்கவில்லை. விஜய் சிம்பிளாக தனது வீட்டிற்கு படக்குழுவினரை அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் ஒரு ஆள் முகத்தில் மட்டும் சந்தோஷமே இல்லை. அது யாருமில்லை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் தான். பார்ட்டியில் உற்சாகம் இல்லாமல் மிகவும் டல்லாக இருந்தார்.

இதற்கு காரணம் அவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஆனால் பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் தற்போது அவர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

அதாவது பீஸ்ட் படத்தின் விமர்சனங்களால் நெல்சன், ரஜினியுடன் ஒப்பந்தமாகியிருந்தார் தலைவர் 169 படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற பதற்றம் அவர் முகத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் அந்த புகைப்படத்தில் நெல்சனின் மரண பீதி அப்பட்டமாகத் தெரிகிறது.

Next Story

- Advertisement -