நெல்சன் தோத்தாலும் நான் தோத்திர கூடாது.. வேற மாறி களத்தில் குதிக்கும் ரஜினி

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் கலையான விமர்சனங்களைப் இடம்பெற்றாலும் விஜய்யின் ரசிகர்களின் பட்டாளத்தான் வசூல் ரீதியாக சாதனை படைத்தது

ஆனால் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு காரணம் படத்தின் திரைக்கதை என பலரும் கூறிவந்தனர். படத்தில் நடனம், பாட்டு, வசனம், சண்டைக்காட்சிகள் என அற்புதமாக இருந்தாலும் திரைக்கதை சொதப்பலால் தான் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு காரணம் என கூறினர்.

தற்போது ரஜினிகாந்த் வைத்து இயக்கும் நெல்சன் அந்தப் படத்திற்கான திரைக்கதையை முதலில் ரஜினிகாந்த் எழுதி வந்ததாக கூறினார். தற்போது ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பரான கேஎஸ் ரவிக்குமார் தலைவர் 169 படத்திற்கு திரைக்கதை எழுதுமாறு கூறியுள்ளார்.

அதனால் கேஎஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா, முத்து, லிங்கா போன்ற சூப்பர் ஹிட் படங்களை வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோகம் வரவேற்பு கிடைத்தது.

அதேபோன்று தற்போது ரஜினி 169-வது படத்திற்கும் கேஎஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுதினால், நிச்சயம் தலைவர் 169  படம் வேற லெவலுக்கு ஹிட் கொடுக்கும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமார் முழுமையாக நம்புகிறார். ஆகையால் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் செய்த தவறை நிச்சயம் தலைவர் 169 படத்தில் செய்யக்கூடாது என்பதற்காக இந்தப்படத்திற்கு ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து நெல்சன் செய்துகொண்டிருக்கிறார்.

ஏனென்றால் பீஸ்ட் படத்திற்குப் பிறகு இந்தப் படத்தை நெல்சனுக்கு கொடுக்கலாமா வேண்டாமா என நூறு தடவை யோசித்த சன் பிக்சர்ஸ் தயக்கத்தை அடியோடு அழிக்கவும்,  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் நெல்சன் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா வரை செல்ல உள்ளார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -