பீஸ்ட்-க்கு சக்சஸ் பார்ட்டி வைத்த சன் பிக்சர்ஸ்.. நெகடிவ்வெல்லாம் ஓரமா போங்க

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்குப் போட்டியாக ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படமும் திரையிடப்பட்டது.

இதனால் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் என படக்குழுவினர் பதற்றமாக இருந்த நிலையிலும், பீஸ்ட் திரையிடப்பட் 12 நாளில் இதுவரை எந்த படமும் வசூல் செய்யாத அளவுக்கு நெட் கலெக்சன் மட்டும் சுமார் 220 கோடியை பீஸ்ட் தட்டி தூக்கியது.

இதனால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் அசுர வெற்றியை தனது படக்குழுவினருடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக பிரம்மாண்டமான பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பார்ட்டிக்கு தளபதி விஜய் கதாநாயகி பூஜா ஹெக்டே, அனிருத், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வருகை தந்து கொண்டாட்டத்தில் இணைந்தனர்.

உண்மையில் இந்த பார்ட்டி எதற்காக ஏற்பாடு செய்ததென்றால் விஜய்-நெல்சன் கிடையே உள்ள பஞ்சாயத்தை சரிசெய்யும் விதமாக சன் பிக்சர்ஸ் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளது என்பது தான் முக்கியம்.

beast-party-cinemapettai
beast-party-cinemapettai

அதுமட்டுமில்லாமல் நெல்சன்-ரஜினி-சன் பிக்சர்ஸ் இடையே இன்னமும் பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதாவது ரஜினியின் 169-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதால் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் முதலில் இயக்குவார் என்றுதெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு சோசியல் மீடியாவில் நெல்சன் அந்த படத்தை இயக்கவில்லை என அடிக்கடி பதிவுகளை போடுவதும் நீக்குவதும் ஆக இருக்கிறார். இப்படி பீஸ்ட் படத்தின் வெற்றியை வைத்தே நெல்சனுக்கு ரஜினியின் 169-வது படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்ற முடிவை சன்பிக்சர்ஸ் எடுக்க இருந்ததால் இந்தப் பார்ட்டிக்குப் பிறகு நெல்சனை சன் பிக்சர்ஸ் உறுதி செய்யும் என்பதை மறைமுகமாக தெரிவித்திருக்கிறது.

Next Story

- Advertisement -