Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக வரும் நயன்தாரா.. ப்ரீமியர் ஷோ படம் எப்படி இருக்கு.? விமர்சனம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக வருகிறார்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் மிரட்டிய நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக் காட்சியாக இப்படம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

connect-nayanthara
ஏற்கனவே இயக்குனர் நயன்தாராவை வைத்து மாயா என்ற திகில் திரைப்படத்தை கொடுத்து அனைவரையும் கவர்ந்தார். அந்த வரிசையில் வெளியாகி உள்ள இந்த படமும் பரபரப்புக்கும், திகிலுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், அனுபம் கெர், வினய் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
கதைப்படி நயன்தாராவின் கணவர் வினய் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழக்கிறார். அதன் பிறகு அவர் தன் அப்பா மகள் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் தன் அப்பாவின் பிரிவை தாங்க முடியாத நயன்தாராவின் மகள் சில மந்திரங்கள் மூலம் இறந்து போன அப்பாவுடன் பேச முயற்சிக்கிறார். ஆனால் ஒரு தீய சக்தி அவரின் உடம்பிற்குள் புகுந்து ஆட்டம் காட்டுகிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது, நயன்தாரா தன் மகளை காப்பாற்றினாரா என்பது தான் மீதி கதை.

connect-nayanthara
வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டப்படும் கதை தான் என்றாலும் இயக்குனர் அதை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கும் விதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதிலும் நயன்தாராவின் நடிப்பும் படம் முழுவதும் வரும் சஸ்பென்ஸ் காட்சிகளும் ஆடியன்ஸை ஆர்வத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது.
Also read: அடுத்தடுத்து பிளாப்பாகும் படங்கள்.. கல்லா கட்ட நயன்தாரா போட்டிருக்கும் திட்டம்
இந்த வருடம் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. இதனால் அவருடைய மார்க்கெட் காலி என்று பலரும் கூறி வந்த நிலையில் இந்த திரைப்படம் அதை தூக்கி நிறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவுக்கு இப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

connect-nayanthara
அந்த வகையில் இந்த பிரீமியர் ஷோவை பார்த்துள்ள அனைவரும் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் தரமான படங்களை தயாரித்து வரும் ரவுடி பிக்சர்ஸ் இன்னும் அதிக படங்களை தயாரிக்க வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர். ஆக மொத்தம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக வருகிறார்.

connect-nayanthara
Also read: லேடி சூப்பர் ஸ்டாரை லாக் செய்த திரையரங்கு உரிமையாளர்கள்.. வேறு வழியின்றி சரண்டரானார் நயன்தாரா
