ஐயா படத்திற்கு முன் மலையாள படத்தில் நடித்துள்ள நயன்தாரா.. 18 வயதில் ஆன்ட்டி போல் இருக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நயன்தாரா. தற்போது நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கக்கூடிய ஒரே நடிகை என்றால் நயன்தாரா தான். அந்த அளவிற்கு இவர் படத்தின் மீதான வரவேற்பும் ஆதரவும் கூடிக்கொண்டே போகிறது.

ஆனால் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு மனசினக்கரே ஜெயராம் படத்தில் தான்  நயன்தாரா அறிமுகமாகியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை ஜெயராம் இணையத்தளத்தில் பதிவிட அது காட்டு தீ போல் பரவியது.

ஆனால் நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ஐயா. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறினார். இன்று வரை நயன்தாராவிற்கு தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுத்துதான் வருகின்றனர்.

ஐயா படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹரி ஐயா படத்தில் நடிப்பதற்கு  ஒரு குடும்ப பாங்கான பெண்ணை தேடியுள்ளார். அதற்காக பிஆர்ஓ ஜான்சன் இடம் ஏதாவது குடும்பப்பாங்கான முகம் கொண்ட நடிகைகள் இருந்தால் கூறுங்கள் என கூறியுள்ளார்.

nayanthara jayaram
nayanthara jayaram

இதனால் ஜான்சன் அவரது நெருங்கிய நண்பரான கேரளா பத்திரிகையில் பணியாற்றி வரும் அஜய் என்பவரிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். அப்போது அஜய் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களை கொடுத்துள்ளார். அதனை ஹரியிடம்  அனுப்பியுள்ளனர், அதன் பிறகுதான் ஐயா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐயா படத்துக்கு பிறகுதான் நயன்தாராவின் மார்க்கெட் எங்கேயோ போனது என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் தமிழில் குவிய தற்போது வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்