புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மாரிமுத்து கேரக்டரை ஈடுகெட்ட போகும் நந்தினியின் கணவர்.. செல்லா காசாக விழி பிதுங்கி நிற்கும் குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல், கடந்த இரண்டு வருஷமாக குணசேகரனின் கேரக்டரில் நடித்த மாரிமுத்துவின் எதார்த்தமான நடிப்பு தான் தூக்கலாக இருந்தது. இதற்கிடையில் கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் அவருடைய நக்கல், நையாண்டி பேச்சு தான் அனைவரையும் கவர்ந்தது. இவர் மறைவிற்குப் பிறகு குணசேகரன் கேரக்டருக்கு வந்த வேலராமமூர்த்தி நடிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் அவருடைய பேச்சும் நடவடிக்கையும் ரொம்பவே எரிச்சல் படுத்தும் விதமாக அமைந்ததால். அதனாலேயே நாடகம் கடந்த பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது இடத்திற்கு போய்விட்டது. இதை எப்படியாவது மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு துருப்புச் சீட்டையும் பயன்படுத்தி வந்தார்கள்.

ஆனாலும் எதுவும் ஒர்க்அவுட் ஆகாத பட்சத்தில் தற்போது குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து இடத்தை ஈடு கட்டும் விதமாக நந்தினியின் கணவர் கதிர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு அதிரடி காட்டி வருகிறார். இவருடைய மாற்றமே தற்போது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு ஏற்ப மக்கள் அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

Also read: சங்கடம் கொடுக்கும் ரெண்டு சீரியல்கள் ஒன்று சேரும் சங்கமம்.. இது என்னடா கதிருக்கும் எழிலுக்கும் வந்த சோதனை

அந்த வகையில் கதிர், குணசேகரனை எதிர்த்து ஒன்னு நீ மாறு இல்லனா என்ன மாறவிடு என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு வார்த்தையாலே குணசேகரன் வாயை அடைத்து விடுகிறார்.  கதிர் இல்லை என்றால் குணசேகரன் ஒன்னும் இல்லை என்பதற்கு ஏற்ப தற்போது செல்லாக்காசாக விழி பிதுங்கி போய் நிற்கிறார்.

இதனை கேள்விப்பட்ட குணசேகரனின் அம்மா விசாலாட்சி, உண்மையிலேயே பித்து பிடித்தது போல் கையில் அருவாவை கொண்டு வந்து எந்த மருமகளும் தேவையில்லை என்று குணசேகரனை உசுப்பேத்தி விடுகிறார். இதற்கிடையில் தர்ஷினியை தேடும் விஷயமாக ஜீவானந்தத்திடம் உதவி கேட்கலாம் என்று நான்கு மருமகளும் ஜீவானந்தத்தை தேடிப் போகிறார்கள்.

ஆனால் அங்கே பர்கானா, ஜீவானந்தம் வெண்பாவுடன் வெளியூர் போயிருக்கிறார், ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். இதன் பிறகு நடந்த விஷயம் அனைத்தும் ஜீவானந்தம் காதுக்கு போகப்போகிறது. இதனை அடுத்து ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு உதவி செய்து தர்ஷினியை கண்டுபிடித்துக் கொடுப்பார். இதற்கு இடையில் கதிரின் மாற்றம் வேற லெவல் ஆக இருக்கிறது. இப்படியே கதிர் முழுமையாக மாறிவிட்டால் இந்த நாடகம் மறுபடியும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து விடும்.

Also read: டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தவறவிட்ட விஜய் டிவி.. போட்டி போட்டு களமிறங்கும் இரண்டு புது சீரியல்கள்

- Advertisement -

Trending News