சங்கடம் கொடுக்கும் ரெண்டு சீரியல்கள் ஒன்று சேரும் சங்கமம்.. இது என்னடா கதிருக்கும் எழிலுக்கும் வந்த சோதனை

Vijay Tv Two Serial Joint Together: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் தற்போது சிறகடிக்கும் ஆசை சீரியல் மட்டும் தான் நன்றாக இருக்கிறது என்று மக்கள் பலரும் விரும்பி பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் பழைய மற்ற நாடகங்களில் அரைத்த மாவை அரைக்காமல் தயவு செய்து முடித்து விடுங்கள் என்று புலம்பி தவிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல்.

ஆரம்பத்தில் என்னமோ நன்றாகத் தான் இருந்தது, குடும்பங்களைக் கவர்ந்து இல்லத்தரசிகளின் மனதை வென்றது. ஆனால் போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிய கதையாக ஆகிவிட்டது. இரண்டு பொண்டாட்டி கதையை அப்பா மகன்களுக்கு உருவாக்கி ஒரு மட்டமான சீரியலாக மாறியது. அதிலும் தற்போது அமிர்தாவிற்கு இரண்டு கணவர் என்று சொல்லும் அளவிற்கு புதுசு புதுசாக கதையை மாற்றுகிறார்கள்.

இதனால் விஜய் டிவி என்றாலே ரெண்டு பொண்டாட்டி ரெண்டு புருஷன் கதை தான் என்கிற அளவிற்கு போய்விட்டது. தயவு செய்து இந்த நாடகத்தை முடித்து விடுங்கள் என்று புலம்பிய நிலையில் இன்னும் அதிகமாகவே சங்கடம் கொடுக்கும் அளவிற்கு இரண்டு சீரியல்கள் ஒன்று சேர்ந்து சங்கமம் ஆக போகிறது.

Also read: டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தவறவிட்ட விஜய் டிவி.. போட்டி போட்டு களமிறங்கும் இரண்டு புது சீரியல்கள்

அதாவது ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் 1000 எபிசோடுகளை தாண்டி ஒரு வழியாக முடித்தார்கள். ஆனால் இந்த நாடகத்தின் இரண்டாம் பாகம் என்று மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என்று புதிதாக கொண்டு வந்திருக்கிறார்கள். தற்போது வரை இந்த நாடகம் மக்களிடம் பெருசாக ரீச் ஆகவில்லை. இருந்தபோதும் கதிர் உடைய நடிப்பு கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கிறது என்பதால் சிலர் பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒன்றாக இணைந்து சங்கமிக்க போகிறது. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸில் ராஜிக்கு திருமணம் என்பதால் நிச்சயதார்த்தத்திற்கு கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவை அழைத்து விட்டு போயிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கோமதி, மருமகள் மீனா மற்றும் கதிர் அனைவரும் கோவிலுக்கு போகிறார்கள்.

இந்த சமயத்தில் பாக்யா அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து அதே கோவிலுக்கு போவதற்கு வருகிறார்கள். வரும் வழியில் இருவருக்கும் சின்ன ஒரு மோதல்கள் ஏற்படுகிறது. அதன் பிறகு இரு குடும்பங்களுமே எதர்ச்சியாக ஒரே ஹோட்டலில் தங்குகிறார்கள். இதற்கிடையில் கதிர் மற்றும் எழிலும் அவ்வப்போது முறைத்துக் கொண்டு ஏதோ விரோதி போல் பார்வையாலே எரித்துக் கொள்கிறார்கள். இது என்னடா இந்த நாடகத்துக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப இருவர்களுடைய சங்கமம் எந்த அளவிற்கு கை கொடுக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

Also read: குணசேகரனுக்கு எமனாக நிற்கப்போகும் கதிர்.. என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம், தலைகீழாக மாறும் எதிர்நீச்சல்