Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது குணசேகரனின் சுயரூபம் ஒவ்வொருவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது. இத்தனை நாளாக கதிரை கைக்குள் வைத்திருந்த குணசேகரின் உண்மையான நோக்கமே தம்பியை எடுபிடி ஆக்கி ஒரு நாயைப் போல் தன் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் குணசேகரன் புத்தி இருந்திருக்கிறது.
அதாவது ஜீவானந்தத்தின் மேல் இருக்கும் வெறியை தீர்த்துக் கொள்வதற்காக குணசேகரன் அவருடைய தம்பி கதிரை வேட்டை நாயாக பயன்படுத்தி வேட்டைக்கு அனுப்பி இருக்கிறார். இதில் இவருடைய உயிர் போனால் கூட பரவாயில்லை ஜீவானந்தம் கதை முடிந்தாக வேண்டும் என்ற கெட்ட புத்தியில் தான் அலைகிறார். இது தெரியாமல் அண்ணன் மேல் இருக்கும் பாசத்தால் கதிர் அந்த சைக்கோவிடம் சென்று ஜீவானந்தத்தை காலி பண்ண போயிருக்கிறார்.
இதற்கிடையில் கதிர் எங்கே என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்டதற்கு சரியான பதிலை கூறாமல் இருந்த குணசேகரனை நந்தினி என் புருஷன் எங்கே என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் முதலில் அவன் என்னுடைய தம்பி அதற்குப் பிறகுதான் உன்னுடைய புருஷன் உன்னிடம் எந்த பதிலையும் நான் சொல்ல முடியாது என்று தெனாவட்டாக கூறுகிறார். தொடர்ந்து குணசேகருக்கும் நந்தினிக்கும் வாக்குவாதம் ஆனதில் தம்பி பொண்டாட்டி என்று பாராமல் கை நீட்ட போய்விட்டார்.
நாளுக்கு நாள் குணசேகரனின் அராஜகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இத்தனை நாளாக கதிரை என்னதான் கழுவி ஊற்றினாலும் புருஷனுக்கு ஒரு ஆபத்து அவமரியாதை என்றால் எந்த மனைவியாலும் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த இடத்தில் தான் நந்தினி அவருக்கான மரியாதையை விட்டுக் கொடுக்காமல் பேசினார். அத்துடன் இங்கு நடந்ததெல்லாம் என் புருஷன் வரட்டும் அவர் யாரு பக்கத்தில் நிற்கிறார் என்று பார்ப்போம் என குணசேகரனிடம் சவால் விடுகிறார்.
Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்
இதற்கு அடுத்ததாக இந்த ஒரு சம்பவத்தால் கதிர் குணசேகரனின் உண்மையான முகத்திரை தெரிந்து கொண்டு திருந்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தபடியாக குணசேகரன், ஞானத்திடம் ஒரு வேலையாக கதிரை நான் அனுப்பி இருக்கிறேன் திரும்பி வரும்போது உயிரோட வருகிறானா இல்லையோ அது தெரியாது என்று சொல்கிறார்.
இதை கேட்ட நந்தினி ஆவேசத்துடன் பத்ரகாளியாக குணசேகரனிடம் சண்டைக்கு போகிறார். கண்டிப்பாக என் புருஷன் இப்ப வந்த ஆகணும் என்று கண் கலங்கியபடி மனவேதனையில் நந்தினி பேசுகிறார். அடுத்ததாக ஜீவானந்தம் கொடைக்கானல் ஊருக்கு வருகிறார். இவரை பார்த்தே ஆக வேண்டும் என்று ஜனனி அங்கே காத்துக் கொண்டிருக்கிறார். இவர்களுடைய சந்திப்பு அந்த வீட்டில் இருக்கும் மருமகளுக்கு சாதகமாக அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அத்துடன் கதிரை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற போவதும் ஜனனி தான்.
Also read: நிஜத்திலும் நாக்கில் நாட்டியம் ஆடிய சனி பகவான்.. எதிர்நீச்சல் குணசேகரனுக்கு வந்த வக்கீல் நோட்டீஸ்