வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நிஜத்திலும் நாக்கில் நாட்டியம் ஆடிய சனி பகவான்.. எதிர்நீச்சல் குணசேகரனுக்கு வந்த வக்கீல் நோட்டீஸ்

Ethirneechal Gunasekaran: இந்தாம்மா ஏய் இந்த வசனம் தான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சிறுசு முதல் பெருசு வரை பலரும் பேசும் இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் தான் எதிர்நீச்சல் ஆதி குணசேகரன். இதற்கு முன்பாக அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அவ்வளவு ஏன் சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.

ஆனால் அப்போதெல்லாம் இவரைப் பற்றி யாருக்கும் பெரிய அளவில் தெரியாது. ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கான மொத்த அடையாளமாக மாறி இருக்கிறது. இப்போது போகும் இடமெல்லாம் இவர் ஆதி குணசேகரன் ஆகத்தான் பார்க்கப்படுகிறார். இவருடைய ஒரிஜினல் பெயர் மாரிமுத்து என்பதை அவரே மறக்கும் அளவுக்கு இந்த கேரக்டர் அவருக்கான புகழை தேடி கொடுத்து இருக்கிறது.

Also read: பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

அதன் காரணமாகவே இப்போது பல நிகழ்ச்சிகளில் இவரை காண முடிகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அப்போது ஜோதிடத்திற்கு எதிராக இவர் பேசிய பேச்சு இவருக்கே ஆப்பாக முடிந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இவர் ஜோசியக்காரர்கள் அனைவரும் மன்னிக்க முடியாதவர்கள் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது இவர்கள் தான் என்று கடும் ஆக்ரோஷமான வாதங்களை முன் வைத்தார்.

மேலும் ஜோசியக்காரர்கள் சொல்வது எல்லாம் பொய். தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் முதல்வராக மாட்டார் என்று கூறினார்கள். இதிலிருந்தே அவர்கள் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்பது தெரிகிறது என விமர்சனம் செய்தார். பதிலுக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிடர்களும் தங்கள் தரப்பு நியாயத்தை முன் வைத்தனர்.

Also read: மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

ஆனால் மாரிமுத்து சுனாமி, நிலநடுக்கம் ஆகியவை வரும் போது ஏன் யாரும் முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இப்படி காரசாரமாக நடந்த அந்த நிகழ்ச்சியை அடுத்து இப்போது மாரிமுத்து மேல் புது வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது. அதாவது இவருடைய பேச்சால் மனம் உடைந்து போன ஜோதிடர்கள் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதற்கு அவர் சரியான விளக்கம் அளிக்காவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நிஜத்திலும் ஆதி குணசேகரனின் நாக்கில் சனிபகவான் நாட்டியம் ஆடிவிட்டார். தற்போது தன் மீது திரும்பியுள்ள இந்த வழக்கை அவர் தைரியமாக எதிர்கொள்வாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: இனிமே ஒத்த கை குணசேகரன் தான் கூப்பிடுவாங்க.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News