பல நாட்களாக தொல்லை அனுபவித்து வரும் நகுலின் மனைவி.. அதுவும் ஒரு முறை அல்ல பல முறை

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனவர் நகுல். அந்த படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக அவர் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

படங்களில் நடித்து கொண்டிருந்த போது தொகுப்பாளினியாக இருந்த ஸ்ருதி என்பவரை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. எப்பொழுதும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் ஸ்ருதிக்கு சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தவறான குறுஞ்செய்திகளை சிலர் அனுப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோசமான புகைப்படங்களை அடையாள மற்ற போலி கணக்குகளில் இருந்து இவருக்கு அடிக்கடி சிலர் குறுஞ்செய்திகள் அனுப்பி வந்துக்கொண்டிருக்கின்றனர். இதனை அவர் பல முறை கண்டித்தும் அந்த குறுஞ்செய்திகளை அனுப்பியவர்கள் அடங்கிய பாடில்லை.

அந்த தேவை இல்லாத பதவியில் ஐ லவ் யூ எனவும் பதிவிட்டுள்ளனர். இதற்கு ஸ்ருதி எப்படி இந்த மாதிரியான ஆண்கள் யாருக்கும் தெரியாத பெண்ணுக்கு மோசமான வீடியோக்களை அனுப்புகிறார்கள் என கேள்வி கேட்டுள்ளார் எனக்கு இது முதல் முறை அல்ல பல முறை மோசமான வீடியோக்கள் வந்ததாக கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் உள்ள பெண் ஒருவர் புகைப்படம் ஒன்றினை ஸ்ருதிக்கு பகிர்ந்துள்ளார்.

அதில் இவ்வாறு அநாகரீகமின்றி புகைப்படங்கள் அனுப்புவர்களுக்கு நீங்கள் இதை திருப்பி அனுப்புங்கள் என கூறி சிறிய கத்திரிக்கோல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை ஸ்ருதி பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இவ்வாறான சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பலர் பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கம் குறித்து தவறான தங்களுடைய கருத்துகளை எப்போதும் கூறிக்கொண்டே இருக்கின்றனர் எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வரிசையாக பல படங்களில் நடித்து வந்த நகுல், ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போனதால், கலர்ஸ் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியை தொகுந்து வழங்கினார். மேலும், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். பின்னணி பாடகரான இவர் பல திரைப்படங்களில் பாடலையும் பாடியுள்ளார்.

நகுலின் மனைவி ஸ்ருதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டப்பாத்தில் அதாவது வாட்டர் பர்த் என்ற முறையில் தண்ணீர் தொட்டியில் குழந்தை பெற்றுள்ளார். இதில் ஸ்ருதிக்கு இயற்கை முறையில் வீட்டில் சுக பிரசவம் நடைபெற்றது. அந்த வீடியோவை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Next Story

- Advertisement -