Connect with us
Cinemapettai

Cinemapettai

Entertainment | பொழுதுபோக்கு

முதல் படமே சூப்பர் ஹிட், பின் காணாமல் போன 6 நடிகைகள்.. அஜித்,கமல் பட நடிகைக்கும் இந்த நிலைமை தானாம்!

guna

தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் அறிமுகமாகும் நடிகைகளுக்கு எல்லாவும் கைகூடிவிடாது. ஆனாலும் சில தோல்விகளுடன் தொலைந்துபோன பலரை கண்டதுண்டு ஆனால் வெற்றிக்கு பின் வெளிவராமல் போனவர்கள் வெகு சிலரே. அப்படியாக நான் இப்போதும் யோசிக்கும் சில நாயகிகளை பட்டியலிட்டுள்ளோம்.

‘திருடா திருடா’ படத்தில் நடித்த அனு அகர்வால். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அனு படத்தில் அவர் இல்லாத சீனே இருக்காது. மணிரத்னம் இயக்கத்தில் வந்து பெரும் வெற்றியடைந்தது. இப்படம் டாப்ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்தாலும் அனுவின் ரோல் பெரிதாக பேசப்பட்டது. ஆனாரலும் அதற்கு பிறகு திரையில் காணவில்லை.

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சரன் கைகோர்த்து வெற்றிகரமாக ஓடிய காதல் மன்னனில் அறிமுகமானவர் மானு. இமாலய வெற்றி கண்ட இப்படத்தினை அடுத்து சுமார் 15ஆண்டுகள் காணாமல் போனார் மானு. இப்போது மீண்டும் திரையில் தோன்றியுள்ளார்.

ajith kathal mannan

ajith kathal mannan

டாப்ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் 2001ல் வெளியான படம் மஜ்னு. இதில் ரிங்க்கி நாயகியாக நடித்திருப்பார் வெற்றிகரமாக ஓடிய இப்படததிற்கு பிறகு திரையில் வரும் வாய்ப்பற்று போனார் ரிங்க்கி.

majnu-actress

majnu-actress

நடிகை ரோஷினி தமிழில் நடிகர் கமலஹாசனோடு இவர் நடித்து அப்போதய காலத்தில் மிகுந்த வரவேற்பு பெற்ற படம் “குணா”. கமலஹாசனோடு இணைந்த ரோஷினி-யின் நடிப்பும் வெகுவாய் பாராட்டப்பட்டது, ஆனால் அதற்கு பிறகு திரையில காணவில்லை. வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் விமர்சனரீதியாக மக்கள் மத்தியில் கமலஹாசன் நடிப்பில் பெரிதாகப்பேசப்பட்டது.

தமிழில் தலைசிறந்த நடிகர்களில் சிம்பு மற்றும் தனுஷை மறுக்க முடியாது அப்படியா இவர்களுடன் தலா ஒரு படங்களில் ஜோடி போட்டவர் “ரிச்சா கங்கோபாத்யாய்“. “ஒஸ்தி”, “மயக்கம் என்ன” என இருவருடனும் வெற்றிப்படம் தந்த இவருக்கோ காலம் கொடுத்த வாய்ப்புகள் சொற்பமே இப்படங்களின் வெற்றிக்கு பிறகு இந்த அம்மணி திரையில் தலைகாட்டவே இல்லை.

oosthe-heroin-simbu

oosthe-heroin-simbu

“கரகாட்டக்காரன்” உட்பட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியவர் நடிகை “கனகா“.
தொடர் வெற்றிகளை பரிசாக்கிய நேரத்திலேயே காணாமல் போனார் இவர். பல்வேறு தவறான செய்திகள் வந்த போதும் தலைகாட்டாத “கனகா” அவர் தரப்பினர்கள் பலரும் வந்த செய்திகளை மறுத்தது மட்டுமே இப்போது வரையிலான கேள்வி.

தோல்வி படங்களை அடுத்து பட வாய்ப்பு கிடைக்காமல் போனவர்கள் மத்தியில் இமாலய வெற்றியில் இதயம் தொட்ட நாயகிகளும் அடுத்தடுத்த வாய்ப்புகளில் இல்லாமல் போவது ரசிகர்களின் இதயத்தில் குத்தாமல் குத்தும் முள்போலே.

Continue Reading
To Top