திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

பொது இடத்தில் கொல காண்டான 10 பிரபலங்கள்.. சம்பவத்தைக் கேட்ட அதிர்ந்துபோன கோலிவுட்

பல பிரபலங்கள் படங்களை தாண்டி பொது இடங்களில் தன்னை அறியாமல் பல பேர் முன்னிலையில் கோபப்பட்டு உள்ள சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும். அதிலும் குறிப்பாக 10 பிரபலங்கள் பொது இடங்களில் கோபம்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார் எதற்காக கோபம் பட்டுள்ளார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

தளபதி விஜய்: நடிகர் விஜய் படங்களில் மட்டுமே ஆவேசமான பேச்சு அசுரத்தனமான நடிப்பு என வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் வில்லு படம் தோல்வி அடைந்தது பத்திரிகையாளர் நேரில் சந்தித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப திடீரென கோபப்பட்டு அனைவர் முன்னிலையிலும் சைலன்ஸ் என கத்தினார். ஆனால் அந்த கோபம் ஒரு நிமிடம் கூட நிலைக்கவில்லை அடுத்த செகண்ட் அமைதியாகி அந்த பிரஸ்மீட்டுக்கு பதிலளித்தார்.

தல அஜித்: அஜித் பொருத்தவரை யாருக்காகவும் எதற்காகவும் பயந்தவர் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனை நிரூபிக்கும் வகையாக கலைஞர் பாராட்டு விழாவில் ஏராளமானோர் இருக்குமிடத்தில் தைரியமாக விழாவில் எங்களை மிரட்டி தான் வர வைக்கிறார்கள் சினிமாவை சினிமாவாக வாழவிடுங்கள் என தைரியமாக அனைவர் முன்னிலையிலும் கோபப்பட்டு கூறினார்.

சூர்யா: நடிகர் சூர்யா என்ஜிகே படப்பிடிப்பில் நடந்த போது அப்போது ரசிகர்கள் சூழ்ந்து பார்க்க வந்துள்ளனர். அப்போது நடு ரோட்டில் ஹெல்மெட் போடாத அவர்களை அனைவரும் முன்னிலையில் கோபப்பட்டு அறிவுரை வழங்கினார்.

சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் காமெடியனாக தொடங்கி தற்போது ஹீரோவாக நடித்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது காமெடி டைமிங் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இவரே ரெமோ படத்தில் தனக்கு நிறைய தொல்லைகள் கொடுத்து வருவதாகவும் என்னை நிம்மதியாக சினிமாவில் வேலை செய்ய விட மாட்டார்கள் எனவும் கூறி அனைவரும் முன்னிலையிலும் கோபப்பட்டு அழுதார்.

தனுஷ்: நடிகர் தனுஷ் விஐபி 2 புரமோஷன் விழாவில் பத்திரிக்கையாளர் ஒருவர் தனுஷோட நிஜ வாழ்க்கையை பற்றி கேள்வி எழுப்பியதற்கு கோபப்பட்டு அங்கிருந்து உடனே எழுந்து சென்றுவிட்டார்.

dhanush simbu
dhanush simbu

சிம்பு: நடிகர் சிம்பு படத்தை தாண்டி சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அனைவருக்கும் ஆதரவாக குரல் கொடுப்பவர். நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் எதிரணியினரை பற்றி கேள்வி கேட்கும்போது தன்னையறியாமல் அனைவர் முன்னிலையிலும் கோபப்பட்டு பேசினார்.

தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினை வந்தபோது அதற்கு குரல் கொடுத்து வந்த சிம்புவிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். அப்போதும் ஒரு நண்டு கடிக்குது நா கடிக்கிறது அதோட வேலை காப்பாற்றுவது தான் தமிழனோட வேலை என ஆவேசப்பட்டு பேசினார்.

டி ராஜேந்தர்: டி ராஜேந்தர் பொருத்தவரை இந்த ஒரு நிகழ்ச்சியில் தான் கோபப்பட்டு உள்ளார் என்று சொல்லவே முடியாது அந்த அளவிற்கு அனைத்து கூட்டங்களிலும் கோபம் பட்டுள்ளார்.

விஷால்: விஷால் படப்பிடிப்பின் போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்து உள்ளனர். அப்போது ரசிகர்கள் அனைவரையும் வசபாடி உள்ளார்.

இளையராஜா: அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் சாங் பாடல் பற்றி தேவையில்லாமல் இளையராஜாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார். அப்போது இளையராஜா உனக்கெல்லாம் அறிவு இருக்கா என திரும்பி கோபப்பட்டு அவரை திட்டினார். எந்த இடத்தில் எதை கேட்க வேண்டும் என தெரியாமல் சம்பந்தம் இல்லாத ஒருவரிடம் கேட்கும்போது திட்டுகள் வாங்குவது சரிதான் என அப்போது அனைவரும் கூறினர்.

விஜய் சேதுபதி: விஜய் சேதுபதி ரசிகரின் கடை திறப்பு விழாவிற்கு செல்லும்போது பத்திரிகையாளர் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி கேட்டார். அப்போது விஜய் சேதுபதி நீங்க எல்லாம் திருந்த மாட்டீங்களா முடிந்துபோன பிரச்சனையை மீண்டும் கிளப்பாதீங்க என அனைவர் முன்னிலையிலும் கோபப்பட்டார்.

vijaysethupathi-master-reply
vijaysethupathi-master-reply
- Advertisement -

Trending News