முன்பதிவிலேயே 100 கோடி வசூலை தட்டி தூக்கிய மோகன்லால்.. இந்திய அளவில் செய்த சாதனை

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே அங்கு மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகின்றனர். அதனால் தற்போது வரை அனைத்து இயக்குனர்களும் மோகன்லால் வைத்து ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

ஆனால் மோகன்லால் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனருக்கு மட்டுமே கூட்டணி அமைத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் படத்தை மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தை தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை தியேட்டரில் வெளியிடாமல் OTTயில் வெளியிடுவதற்கு படக்குழு முன்வந்தனர். ஆனால் நினைத்தபடி அதற்கான சாத்தியக் கூறு அமையாததால் படத்தை வெளியிடாமல் தற்போது வரை மௌனம் காத்து வந்தனர். ஆனால் மோகன்லால் படத்தை கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டார்.

தற்போது கேரளாவிலிருந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் படத்தை OTT  வெளியிட முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகரமாக உலகம் முழுவதும் 4100 திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் மோகன்லால் மற்றும் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது படத்தை திரையரங்கில் வெளியிட உள்ளதால் அதற்கான புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மோகன்லால் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்எனக் கூறியுள்ளார். பட தயாரிப்பாளர் முன் பதிவிலேயே இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் தற்போது மோகன்லால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்