ரஜினிக்கு ஜோடி ஜெயலலிதாவா.? இயக்குனருக்கு கொக்கி போட்டு நடிகையை தூக்கிய பிரபலம்

தமிழ் சினிமாவில் தற்போது ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அப்போதைய காலகட்டத்தில் எம்ஜிஆர் கலர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போதுதான் ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்தார்.

அப்போது எம்ஜிஆருடன் ஜோடி போட்ட சில நடிகைகள் ரஜினிகாந்தின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் அதனை விரும்பாததால் நடிக்க இருந்த சில நடிகைகளை தடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆர் தியாகராஜன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு ரஜினி, ராதிகா, கே ஆர் விஜயா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரங்கா. இப்படத்தில் கே ஆர் விஜயாவின் கதாபாத்திரம் முதலில் ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. மேலும், இப்படத்திற்காக ஜெயலலிதாவின் ஆடைகள் உட்பட அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு நாள் முன்னதாக இப்படத்தில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டாம் என இயக்குனரிடம் எம்ஜிஆர் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை கே ஆர் விஜயா விடம் பேசி உள்ளேன் என எம்ஜிஆர் கூறியுள்ளார். இதனால் ரங்கா படத்தில் இருந்து ஜெயலலிதா விலக்கப்பட்டார்.

மேலும், முள்ளும் மலரும் படத்தில் ஆரம்பத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை லதா நடித்துள்ளார். இதை தொடர்ந்து 10 நாள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் தரப்பினர் இப்படத்தில் லதா நடிக்கக்கூடாது அவரை தூக்கிவிடுங்கள். மேலும், 10 நாட்களுக்கான செலவை தாங்கள் தருகிறோம் என கூறியுள்ளனர்.

அதனால் தான் லதாவை படத்திலிருந்து படக்குழுவினர் தூக்கினர். அதன்பிறகு லதா கதாபாத்திரத்தில் ஃபடாஃபட் ஜெயலக்ஷ்மி நடித்திருந்தார். எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த சில நடிகைகள் ரஜினியுடன் குறைந்த வயதில் இருந்தாலும் ரஜினியுடன் ஜோடியாக நடிப்பது எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்