எம்ஜிஆர் கடைசியாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? டாப் ஹீரோக்களை வைத்து பார்த்தால் 2-5 சதவீதம் தானாம்!

இன்றய சினிமா உலகில் இந்திய அளவில் மிகப்பெரிய பங்களிப்பை தருவது தமிழ் சினிமாக்கள் தான். இந்தியா முழுக்க திரையிடப்படும் “இந்தி” மொழிப்படங்களை விடவும் சில தரப்பினரால் பெரிதளவு எதிர்பார்க்கப்படுவன தமிழ் படங்கள்.

அதனாலோ என்னவோ இப்போது தமிழ் பட ஹீரோ, ஹீரோயின் காமெடியன் என எல்லோருக்குமான ஊதியம் கிடுகிடுவென உயர்கிறது.

அதெல்லாம் இருக்கட்டும் முன்னால் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த திரைப்படங்களில் வாங்கிய ஊதியம் இப்போதய நடிகர்கள் வாங்குகிற ஊதியத்தில் வெறும் 2-5சதவிகிதம் தான்.

ஒளிவிளக்கு படத்திற்காக அவர் பெற்ற முழு ஊதியம் வெறும் 5லட்ச ரூபாய் தான். இது இப்போது சில நடிகர்கள் வாங்கும் ஊதியத்தின் 2 சதவிகிதம் தான்.

“நம்நாடு” படத்திற்காக இவர் பெற்ற ஊதியம் வெறும் 8லட்சம் ரூபாய் தானாம் இது சில நடிகர்களின் ஊதியத்தில் 5 சதவிகிதம் தான். ஆனாலும் அனறைய பாக்ஸ் ஆபிஸ் கிங் வசூல் சக்ரவர்த்தி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் தான் எம்.ஜி.ஆர்.

அன்றைய பணமதிப்பு வேறு இன்றைய பணமதிப்பு வேறு தான். ஆனால் தற்போது ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் ஊதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தி விடுகின்றனர். தயாரிப்பாளர்களும் அதற்கு தலையசைத்து விடுகின்றனர்.

தற்போது கோலிவுட்டின் வசூல் ராஜா என்றழைக்கப்படும் தளபதி கிட்டதட்ட 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதற்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்திற்காக தல அஜித் 50 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அஜித் ஒரு படம் முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிப்பார் அதேபோல்தான் எம்ஜிஆரும் இருந்துள்ளார்.

mgr ajith kumar
mgr ajith kumar
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்